அண்மை

தமிழ் வருடங்களுக்கு ஏன் சமஸ்கிருத பெயர்?

தமிழ் வருடங்களின் தமிழ் பெயர்கள்


சித்திரை 1 தமிழ் வருடப்பிறப்பாவது தமிழ் மரபு. தமிழ் வருடம் பிறப்பது தை ஒன்றா? சித்திரை ஒன்றா? என்ற கேள்வியை எழுப்புவதை காட்டிலும் நாம் அதிகம் கவனஞ்செலுத்த வேண்டியது 'ஏன் இன்னும் தமிழ் வருடப்பிறப்புக்கு சமஸ்கிருத சொற்களை பயன்படுத்துகிறார்கள்?' என்பது தான்.


தமிழன் ஒவ்வொரு சொல்லையும் இடுகுறிப்பெயர் அல்லது காரணப்பெயராக கொள்கிறான். 


எவ்விதக் காரணமும் இல்லாமல் முன்னோர் இட்டு வழங்கி வரும் பெயர்கள் இடுகுறிப் பெயர்கள் ஆகும். காரணம் கருதி இடப்படும் பெயர்கள் காரணப்பெயராகும்.


தமிழ் வருடங்களானது 60 வருட சுழற்சி முறையாகும். ஒவ்வொரு வருடமும் நம் முன்னோர்கள் எவ்வாறான கால சூழ்நிலைகளை அனுபவித்தார்களோ அதையே அவ்வருடத்திற்கு பெயராக்கினார்கள்.


"திருமறைக்காடு" என்னும் ஊர் பெயரானது 'வேத ஆரண்யம்' என்று தமிழிலிருந்து நேரடியாக சமஸ்கிருத பொருளிற்கு ஏற்றார்படி திரிபானது போல தமிழ் வருடப்பெயர்கள் ஆரூடத்தில் சமஸ்கிருத ஆதிக்கம் அதிகமானவுடன் மாறத்தொடங்கின.


ஒவ்வொரு வருடமும் 'அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்' என்று அனுப்பும் போதும் அந்த வருடத்தின் பெயரை 'பிலவ', 'சார்வாரி', 'சுபகிருது' என்று குறிப்பிடும் போது அது தமிழ்புத்தாண்டாகவே தோன்றவில்லை. சமஸ்கிருத ஆண்டாகத்தான் எண்ண வைக்கிறது. 


சமஸ்கிருதம் எந்த வகையிலும் நம் மொழிக்கு தாழ்ந்தது அல்ல எனினும் ஒருமொழி என்றும் சீரிளமை திறம்வியந்து செயல்மறந்து பார்க்கும் படி அமைய வேண்டுமானால் அம்மொழியின் வளம் வேறுறொரு மொழியால் குன்றாமல் செழித்தோங்க வேண்டும். தமிழ் செம்மொழியானாலும் இன்றளவும் 7 மொழியின் கூட்டையே கொண்டு வளமிழக்கிறது. அதில் சமஸ்கிருதத்தின் பங்கு அதிகம்.


இதற்கான சரியான தீர்வு இயல்பு பயன்பாட்டில் தனித்தமிழ் மொழியை அதிகப்படுத்துவதே ஆகும். நாள்காட்டி (காலெண்டர்) கூட வருடப்பெயர்கள் மட்டுமல்லாது நட்சத்திரம், திதி என்று பல சொல் சமஸ்கிருத்திலே வெளிவருவதால் அதை தினந்தோறும் பார்க்கும் நமக்கும் அச்சொல் பழக்கமாகிவிடுகிறது.


இவற்றை நீக்க வேண்டும். எங்கும் தமிழே உலவ வேண்டும். இல்லாத சொற்களுக்கு கலைச்சொல் ஆக்கம் துரிதமாக வேண்டும். 


'சுபகிருது' என்று சொல்லாதீர்கள். 'நற்செய்கை' என்று தமிழில் கூறுங்கள். எழுத்து வழக்கில் மட்டுமல்ல பேச்சு வழக்கிலும் தமிழை விரவவிடுங்கள். 


இதுபோல இன்னும் 60 வருடங்களுக்குமான மொத்த தமிழ் பெயரை இங்கு தருகிறேன். அனைவரும் இதை புழக்கமாக்கவும்.


தமிழ் வருடங்களின் தமிழ் பெயர்கள்


1.நற்றோன்றல் - பிரபவ

2.உயர்தோன்றல் - விபவ

3.வெள்ளொளி - சுக்கில

4.பேருவகை - பிரமோதூத

5.மக்கட்செல்வம் - பிரசோற்பத்தி

6.அயல்முனி - ஆங்கிரச

7.திருமுகம் - ஸ்ரீமுக

8.தோற்றம் - பவ

9.இளமை - யுவ

10.மாழை - தாது

11.ஈச்சுரம் - ஈஸ்வர

12.கூலவளம் - வெகுதான்ய

13.முன்மை - பிரமோதி

14.நேர்நிரல் - விக்ரம

15.விளைபயன் - விஜ

16.ஓவியக்கதிர் - சித்ரபானு

17.நற்கதிர் - சுபானு

18.தாங்கெழில் - தாரண

19.நிலவரையன் - பார்த்திப

20.விரிமாண்பு - விய

21.முற்றறிவு - சர்வசித்

22.முழுநிறைவு - சர்வதாரி

23.தீர்பகை - விரோதி

24.வளமாற்றம் - விக்ருதி

25.செய்நேர்த்தி - கர

26.நற்குழவி - நந்தன

27.உயர்வாகை - விசய

28.வாகை - சய

29.காதன்மை - மன்மத

30.வெம்முகம் - துன்முகி

31.பொற்றடை - ஏவிளம்பி

32.அட்டி - விளம்பி

33.எழில்மாறல் - விகாரி

34.வீறியெழல் - சார்வரி

35.கீழறை - பிலவ

36.நற்செய்கை - சுபகிருது

37.மங்கலம் - சோபகிருது

38.பகைக்கேடு - குரோதி

39.உலகநிறைவு - விசிவாவசு

40.அருட்டோற்றம் - பராபவ

41.நச்சுப்புழை - பிலவங்க

42.பிணைவிரகு - கீலக

43.அழகு - சௌமிய

44.பொதுநிலை - சாதாரண

45.இகல்வீறு - விரோதிகிருது

46.கழிவிரக்கம் - பரிதாபி

47.நற்றலைமை - பிரமாதீச

48.பெருமகிழ்ச்சி - ஆனந்த

49.பெருமறம் - இராட்சச

50.தாமரை - நள

51.பொன்மை - பிங்கள

52.கருமைவீச்சு - காளயுத்தி

53.முன்னியமுடிதல் - சித்தார்த்தி

54.அழலி - ரௌத்ரி

55.கொடுமதி - துன்மதி

56.பேரிகை - துந்துபி

57.ஒடுங்கி - ருத்ரோத்காரி

58.செம்மை - ரக்தாட்சி

59.எதிரேற்றம் - குரோதன

60.வளம் - அட்சய

3 கருத்துகள்

  1. ஆண்டுகளுக்கு பெயரிடுவதில் முரண்படுகிறேன் என்றாலும்...

    மேற்சொன்ன செய்தியின் முதுகெலும்பாக திகழும்

    "இதற்கான சரியான தீர்வு இயல்பு பயன்பாட்டில் தனித்தமிழ் மொழியை அதிகப்படுத்துவதே ஆகும். நாள்காட்டி (காலெண்டர்) கூட வருடப்பெயர்கள் மட்டுமல்லாது நட்சத்திரம், திதி என்று பல சொல் சமஸ்கிருத்திலே வெளிவருவதால் அதை தினந்தோறும் பார்க்கும் நமக்கும் அச்சொல் பழக்கமாகிவிடுகிறது.



    இவற்றை நீக்க வேண்டும். எங்கும் தமிழே உலவ வேண்டும். இல்லாத சொற்களுக்கு கலைச்சொல் ஆக்கம் துரிதமாக வேண்டும். "...
    என்ற வரிகளுக்கு முழுவதுமாய் உடன்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 60 ஆண்டு சுழற்சி முறை.. ஆண்டு பெயர்.. புத்தாண்டு.. இவைகளை ஒழித்துகட்ட எனக்கு வாய்ப்பு கிடைத்ததேயானால் அதற்கும் பங்களிக்கலாம். ஆனால் இவைகளை ஒழிப்பதென்பது நடவாத ஒன்றாகிவிட்டது.

      தை 1 என்று அரசு கத்தி கத்தி பார்த்தது யார் கேட்டார்கள்?

      வருட பெயர்களையும் கூட இவ்வாறாக அழித்துவிட முடியாது என்றே எனக்கு தோன்றுகிறது.

      அதற்கு நாம் பயன்பாட்டில் இருந்து அவைகளை நீக்கத்தான் வேண்டும்..

      அதற்கு கலைச்சொற்களை ஆக்க வேண்டும். அதை இதுபோன்ற கட்டுரை வழியே பரப்ப வேண்டும்..

      ஒவ்வொரு ஆண்டும் சமஸ்கிருத பெயரோடு தொடங்கும் தமிழ் புத்தாண்டுக்கு இந்த மொழிப்பெயர்புகள் தேவலாம் என்று தோன்றுகிறது.

      நீக்கு
  2. அதுவும் சரிதான்.. நெல் இடப்படாத இடத்தில் புல் முளைக்கத்தான் செய்யும்.. களைக்கொல்லி கொண்டு களையெடுப்பதைவிட களைகளுக்கு விளைநிலத்தில் இடமளிக்காமல் இருப்பதே நன்று. ஆகட்டும்..
    நல்லெண்ணத்தின் பேரில்.. நல்தோன்றலில் தொடங்கும் இந்த நற்செய்கையை நான் ஆதரிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை