தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜுலை 24 ஆம் தேதி குரூப் 4 பதவிகளுக்கான தேர்வு நடத்தியது. சுமார் பதினெட்டரை லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள்.
சுமார் 7300 இடங்களுக்கான பதவிகளுக்கு தேர்வு நடந்தது.
அதில் VAO காலி இடங்கள் 275.
ஜுனியர் அசிஸ்டென்ட் இடங்கள் 4000.
டைப்பிஸ்ட் இடங்கள் 2000.
ஸ்டெனோ டைப்பிஸ்ட் சுமார் 900.
கொரானாவினால் மூன்றாண்டுக்கு பிறகு இந்த தேர்வு நடைபெற்றதால் இத் தேர்வு முக்கியத்துவம் பெற்றது.
வழக்கமாக நடைபெறும் தேர்வாக இருந்தால் இதன் கட்ஆஃப் 180 க்கு மேல்தான் இருந்திருக்கும்.
ஆனால் இந்த முறை கேட்கப்பட்ட கேள்விகள் மிகக் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கடந்த பத்தாண்டுகளில் இதுவே கடினமான குரூப் 4 தேர்வு என பயிற்சி மையங்களே ஒப்புக் கொள்கிறார்கள்.
இந்த முறை ஆங்கிலத்தை பாடமாக படித்த மாணவர்களும், தமிழில் 100 கேள்விகள் கட்டாயமாக எழுத வேண்டும் என புதிய விதி அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் முதல் பகுதியில் 40 கேள்விகள் சரியாக எழுதியவரின் ஆன்ஸர் பேப்பர் மட்டுமே பகுதி இரண்டு திருத்தத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
முதல் முறையாக தேர்வு எழுதுபவர்கள், சும்மா எழுதி பார்ப்போம் என எழுதுபவர்கள், உறவினர் வற்புறுத்தலால் எழுதுபவர்கள், சராசரி மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் பயிற்சி மையத்தில் படிக்காதவர்கள் போன்றோர் இந்த தேர்வில் 140 கேள்விகளுக்கு சரியாக விடை எழுதுவது என்பது கடினமாகும்.
இவர்களையெல்லாம் நீக்கிவிட்டால் சுமார் ஒரு லட்சம் பேர்களே உண்மையான போட்டியாளர்கள்.
தமிழை பொருத்தவரை பெரும்பாலும் என்பது கேள்விகள் வரை எளிமையாகவும் சுமார் இருபது கேள்விகள் முறையாக தமிழ் இலக்கணம் தெரிந்தவர்கள் மட்டுமே எழுதக் கூடியதாகவும் இருந்தது.
இரண்டாவது பகுதியில் கணக்கு கேள்விகள் நேரடியாக இல்லாமல் ஒர்க் அவுட் செய்து போடும்படி இருந்தது. இதனால் 25 நிமிடத்தில் போட வேண்டிய கணக்குகளுக்கு 50 நிமிடம் பிடித்தது. நேரம் போதாததால் தேர்வர்கள் கடைசி இருபத்தைந்து கேள்விகளை படிக்க கூட நேரமில்லாமல் போனது.
நன்றாக கணக்கு போடுபவர்களாலேயே 25 கேள்விகளில் 20 கேள்விகள் மட்டுமே சரியாக எழுத முடிந்தது. சராசரி மாணவர்களுக்கு 15 கணக்கு சரியாக போடுவதே பெரிய விஷயமாக இருந்திருக்கும்.
அடுத்த பிரிவான பொது அறிவுப் பகுதி பகுதியில் உள்ள 75 கேள்விகள் மிகவும் கடினமான முறையில் கேட்கப்பட்டது ஒரு கேள்வியில் ஐந்து கேள்விகள் உள்ளடக்கி பல கேள்விகள் கேட்கப்பட்டன.
UPSC தேர்வுகளில் கேட்பது போல கேள்விகள் சுற்றி வளைத்து கேட்கப்பட்டது. ஆன்ஸ்வர் கீ வெளியிடும் பிரபல பயிற்சி மையங்களாலாலேயே மாலை வரை விடைக்குறிப்புகளை கொடுக்க இயலவில்லை. தேர்வு முடிந்து ஒரு வாரம் ஆகியும் இன்னும் ஐந்து கேள்விகளுக்கு விடை உறுதியாக தெரியவில்லை
இதனால் நன்றாக படிக்கக்கூடியவர்களால் தமிழில் 90 கேள்விகளும் கணக்கில் 20 கேள்விகளும் பொது அறிவில் 50 கேள்விகள் வரையே சரியாக எழுதியிருக்க முடியும்.
இப்போது உள்ள 7300 காலி இடங்கள் போஸ்டிங் போடும்போது 500 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
குரூப் 2 தேர்வு எழுதியவர்களே குருப் 4 தேர்வும் எழுதியிருப்பதால், குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெறும் சுமார் 5200 பேர் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அவர்கள் பணியில் சேர போவதில்லை.
அதனால் 7300 காலி இடங்கள் என்றாலும் 12000 இடங்கள் வரை கட்ஆஃப் பெற்றவர்கள் தேர்வாக வாய்ப்புள்ளது. அதற்கு ஏற்றாற் போல 1:2 என்ற விகிதத்தில் அதாவது 14600 இடங்கள் வரை செர்டிபிகேட் வெரிஃபிகேசனுக்கு அழைக்க உள்ளார்கள்.
கட்ஃஆப் என்ன வரும்?
VAO பணிகளை பொறுத்தவரை 275 இடங்கள் மட்டுமே இருப்பதால் அதற்கு கட்ஃஆப் குறைய வாய்ப்பில்லை. அதனால் 180 கேள்விகளுக்கு குறைவாக பெற்றவர்களுக்கு எந்த பிரிவிலும் வாய்ப்பு இல்லை.
அது போல ஸ்டெனோ டைப்பிஸ்ட் பணிகளை பொறுத்தவரை 900 பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை குறைவு. அதனால் 140 கேள்விகள் சரியாக எழுதியவர்களுக்கு பொது பிரிவிலும், மற்றவர்களில் 130 கேள்விகளுக்கு குறைவாக பெற்றவர்களுக்கு கூட நிச்சயமாக பணிவாய்ப்பு கிடைக்கும்.
ஜூனியர் அஸிஸ்டன்டை பொருத்தவரை பொதுப்பிரிவினருக்கு 170 க்கு மேலும் BC, MBC பிரிவினருக்கு 165 சரியான விடைகளும் கட்ஆஃப் ஆக அமையும். SC, BC (M) பிரிவினருக்கு 160 ஆக CUTOFF அமையக்கூடும்.
டைப்பீஸ்ட் வேலைக்கு தமிழ், ஆங்கிலம் ஹையர் முடித்தவர்கள் எண்ணிக்கை மொத்த போட்டியாளர்களில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே இருப்பதாலும் காலி இடமும் இரண்டாயிரம் வரை இருப்பதாலும் கட்ஆஃப் குறைவாகவே இருக்கும்.
டைப்பிஸ்டை பொருத்தவரை பொதுப்பிரிவினருக்கு கட்ஆஃப் 160 கேள்விகளாகவும், பிற்பட்டவர்களுக்கு 155 ஆகவும் இருக்கக் கூடும்.
இதரபிரிவினர் MBC, SC, BC (M) பெண்கள் போன்றவர்களுக்கு CUTOFF 150 பெற்றாலே டைப்பிஸ்ட் வேலை நிச்சயமாக கிடைக்கும்.
குறிச்சொல்:
TNPSC
அப்படியே இந்த (PsTM) தமிழ் வழி கல்வி பயின்றோருக்கு ஏதும் தேறுமானு பாத்து சொல்லுங்க...
பதிலளிநீக்குகூண்டை விட்டு கிளி போயிருக்கு வந்தவுடன் ஏடு எடுத்து பார்த்திடுவோம்.
நீக்கு