இதையும் காண்க
பிரிவினைகள் புதைந்தது
பேதங்கள் களைந்தது
சுதந்திர திருநாளிலே
எம் தியாக தகைகளின்
இரத்தமே
இன் சுதந்திர தினத்தின்
சப்தம்
உரிமைகளை உணர்த்துவோம்
உணர்வுகளை கடத்துவோம்
சுதந்திர தினத்திலே
பாரத மாதா பாரதி செய்தாள்
பாரதி செய்ததை
நாம் மதிக்க செய்வோம்
செந்நீரும் கண்ணீரும்
சென்றெங்கோ போனது
பொன்னான காலத்தை
தந்தெங்கோ போனது
வேற்றுமை எங்கள்
இனத்தாலே
ஒற்றுமை எங்கள்
குணத்தாலே
பொதுநலம் பிறந்து
சுயநலம் இறந்து
சுகமாய் சுமந்து
வந்தது சுதந்திரம்
அறனுக்கு அறனாய்
மறனுக்கு மறனாய்
அடித்தவள் காண்
எங்கள் அன்னை
எல்லை எங்களுக்கு
இல்லை
நாங்கள்
இந்திய தாயின்
பிள்ளை
கடைகோடி
மக்களுக்கும்
கிட்டிதே சுதந்திரம்
நெடு வானம்
திரை பிளக்க
வந்தே மாதரம்
ஏற்ற தாழ்வு
இங்குண்டு
அதை
எள்ளி நகைப்போம்
இன்று
சுதேச பொருளை
போற்று
சுதந்திர கொடியை
ஏற்று
இருள்
போக்கிய
விறல்
விடுதலை
வீரரை
புகழ்
இதையும் காண்க
உங்களுடைய 75ஆவது சுதந்திர தின வாழ்துக்கள் கவிதையை தென்றல் இதழில் வெளியிட விரும்பினால் உங்களது கவிதையை தட்டச்சு செய்து பெயர் ஊர் பெயருடன் எங்களது WhatsApp எண்ணுக்கு அனுப்பி வைக்கவும். எங்களை வாட்ஸ்ஆப்பில் தொடர்பு கொள்ள இங்கே தொடவும்