அண்மை

தமிழில் கலந்த பிறமொழிச் சொற்கள்

தமிழில் கலந்த பிறமொழிச் சொற்கள்


ஒரு மொழி மற்றொரு மொழியுடன் தொடர்பு கொள்ளும் போது ஒரு மொழியில் உள்ள சொற்கள் மற்றொரு மொழியில் கலத்தல் இயல்பாகும். மொழி தொடர்பு என்பது மொழி வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். கடன் வாங்கப்பட்ட சொற்கள் இல்லாத மொழியே பெரும்பாலும் இல்லை. ஏனென்றால், எந்த நாடும் தனித்து வாழ முடியாது. ஒரு நாடு மற்றொரு நாட்டுடன் தொடர்பு கொள்ளும் போது வேற்றுமொழி தொடர்புக்கும் கலப்புக்கும் வழிகொலுகிறது. அதனால் செந்தமிழில் ஏற்பட்ட கலப்புக்கு யாரும் வருத்தப்பட வேண்டாம். என்னதான் தமிழில் பல கலப்புச் சொற்கள் இருந்தாலும். சுயமாய் தனியே வீறுநடைப் போடும் திறன் தமிழுக்கு உண்டு. 


இந்த பதிவில் தற்போது மிக குறைவான வார்த்தைகளே பதிவிடப்படுகிறது. விரைவில் வார்த்தைகள் கிடைக்க சேர்க்கப்படும். நீங்கள் அறிந்த கலப்பு சொற்களை என்ன மொழியென்தை குறிப்பிட்டு Comment செய்யவும்


{tocify} $title={Table of Contents}


வடமொழி


அக்கிரகாரம் - பார்ப்பனக் குடியிருப்பு

ஆகாரம் - உணவு

இங்குலிகம் - சாதிலிங்கம்

ஈசானிய மூலை - வடகிழக்கு திசை

உதரம் - வயிறு

ஊனம் - குறைபாடு

எதார்த்தம் - உண்மை

ஏலக்காய் - மணகம்

ஐக்கியம் - ஒற்றுமை

ஒட்டியாணம் - இடையணி

ஓமம் - வேள்வி

ஔஷதம் - மருந்து


போர்த்துகீசியம்


அன்னாசி - செந்தாழை

ஆயா - செவிலி

கடுதாசி - கடிதம்

சாவி - திறவுகோல்

பாதிரி - அறகுரு


பாரசீகம்


கல்லா - கடைப்பணப்பெட்டி

காக்கி - களிநிறம்

கிஸ்தி - நிலவரி

சக்பந்தி - வரம்பு

டகல்பாச்சி - ஏமாற்றுதல்


அரேபியம்


அல்லா - இறைவன்

இமாம் - தொழுகை

இலாகா - அலுவல் பிரிவு, துறை

சுபேதார் - மாவட்ட அதிகாரி

தவில் - பதலை


இந்தி


சவுக்காரம் - துணிவழலை

சொஜ்ஜி - தேங்காய்ப்பணியாரம்

ஜோடனை - அணிபுனைவு

டிகானா - தங்குமிடம்

டீக்கு - மிடுக்கு


மராத்தி 


அபாண்டம் - பொய்ப்பழி

காகிதம் - தாள், மடல்

கில்லாடி - கொடியோன்

சாவடி - வழிப்போக்கர் தங்கும் விடுதி

பால்கோவா - திரட்டுப்பால்


இந்துஸ்தானி


அசல் - உண்மை

உஷார் - விழிப்பாயிருத்தல்

தபால் - அஞ்சல்

குமாஸ்தா - எழுத்தர்

குல்லா - தொப்பி


ஆங்கிலம்


ஆஸ்பத்திரி - மருத்துவமனை

ஹூக்கு - கொக்கி

ஐஸ்கிரீம் - பனிக்குழைவு

ஓட்டு - வாக்கு

உல்லன் துணி - கம்பளித்துணி

புக் - நூல், பனுவல்

நோட் - குறிப்பேடு

5 கருத்துகள்

  1. உருதுசொற்கள் தமிழில்...


    மன்னிப்பு - பொறுத்துக் கொள்ளுதல்


    ஜமீன் -நிலக்கிழார்

    வாய்தா-தவணை

    ஜிகினா -மினுமினுக்கி

    வசூல்- தண்டல்/ தொகை

    லோலாக்கு- தோடு

    லோட்டா/ரோட்டா- தண்ணீர் செம்பு

    லத்தி -குறுந்தடி

    மௌசு- கவர்ச்சி

    மசோதா- சட்ட முன்வரைவு

    பைசல்- தீர்வு

    தர்ணா - மறியல் போராட்டம்

    தரப்பு - பக்கம்

    தராசு - துலாக்கோல்

    ஜோல்னா- தொங்கு பை

    தண்டோரா- பறையறிவிப்பு

    பேக்கு -மடையன்

    போதை - கள் வெறி/மயக்கம்

    பேட்டி - நேர்உரை

    வாபஸ்- திரும்பபெறுதல்

    போணி- முதல் விற்பனை/ பரிமாற்றம்

    பீடி- இலைசுருட்டு

    தாயத்து -சுருள் தகடு

    விலாவரி- முழுவிளக்கம்

    பஜாரி - பரத்தை

    பயில்வான் -மல்லன்

    பதில் - விடை

    தாசில்தார் -வட்டாச்சியர்

    பலே - அருமை/சிறப்பு

    நாசூக்காக - நயமாக

    பங்களா - மாடமாளிகை

    பட்டா- நில உரிமை ஆவணம்

    நபர் - தனியாள்/ ஒருவர்



    இவை மட்டுமா..??

    மத்தாப்பு...
    புதீனா கீரை....
    லாடம் கட்றது... முதலியனவும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரோட்டா தண்ணீர் செம்பு என்றால் டம்ளர் என்ன மொழி

      நீக்கு
    2. Tumbler என்பது ஆங்கில சொல். Tumble,, tumbled,, போன்றவை தலைகீழாக விழுதல்/ குறிபார்த்து கவிழ்த்தல்/ இடறுதல்/ குட்டிக்கரணவித்தை முதலான பொருளில் உபயோகப்படுத்தப்படுகிறது.

      இதுவுமே நேரடி ஆங்கிலம் இல்லை ஜெர்மானிய மூலத்தை கொண்டது.. ஜெர்மன் பூராவுமே ஆரியத்தை மூலமாக கொண்டது. ஆரியத்தின் அஸ்திவாரமே பழந்தமிழ் தான்!

      தோண்ட த் தோட்ட இன்னும் வரும்

      டமரா/டவரா

      ரோதை (சக்கரம்).....

      நீக்கு
    3. 'பூரா' என்ன மொழி 😛

      நீக்கு
  2. இமாம் என்பது தொழுகை அல்ல. தொழுகை நடத்துபவர் அல்லது பள்ளிவாசல் தலைவராக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை