அண்மை

ஞான ஆத்திசூடி - தீசன்

 

ஞான ஆத்திசூடி

பாயிரம்

நேரிசை வெண்பா


ஆத்தி சூடிதமிழ் மாலை தேடி

ஏத்தி பாடியருள் ஔவைக்கு - வித்தை

புத்தாக்கி பத்த நெறி தந்த

புத்திபா ரதிக்கே இது

----------------------------------

அம்மை யப்பன் தெய்வம்

ஆசை விட விரும்பு

இம்மை தெளி

ஈகைக்கென்றே ஈட்டு

உண்மையே மொழி

ஊனுண்ணு வாழாதே

எல்லாம் இறைவன் நம்பு

ஏகாந்தம் மகிழ்

ஐயம் தீர்க்க முயல்

ஒன்றே குலமென்றுணர்

ஓத காலமொதுக்கு

ஔவை சொல் வாழ்


ஃ போல் அரிதாகு


கந்தை எளிமை காண்

காந்தி நெறி நட

கிசம் கிள்ளாதே

கீழெண்ணம் தவிர்

குணம் குன்றேறு

கூர்மம் போல் பொறு

கெடுத்தார்க்கும் நன்செய்

கேளிர் சொல் கேள்

கைவினை கல்

கொடுக்க பழகு

கோள் கொள்

கௌதமன் போற்று


ங போலுதவு


சத்தியமாய் இரு

சாதி மூடர்க்கே

சினம் தவறு

சீவநெறி யொழுகு

சுத்தம் நித்தம்

சூள் செய்யாதே

செந்தமிழே ஞானம்

சேய் மனம் கொள்

சைரிகம் போற்று

சொல் தெள் சொல்

சோம்பல் அழி

சௌமியம் நிற்காது


ஞயம்பட நட

ஞாலநன்று செய்

ஞிமிரே அண்டம்

ஞெப்தியே அறிவு

ஞேயமுற்று வாழ்

ஞைஞை தவிர்

ஞொள்ளறிவும் வீணன்று


தனக்கென வாழாதே

தாமசம் நீக்கு

திருட வெட்கு

தீஞ்சொல் விலக்கு

துன்பத்தில் சிரி

தூக்கம் குறை

தெளிந்துபதேசி

தேடியடை ஞானம்

தையல்மதி நாடு

தொழில் செய்ய விரும்பு

தோழமை கொள்

தௌவலெண்ணாதே


நன்று நினை

நாத்திகம் வீண்

நித்தியம் புகழ்

நீஞ்சப் பழகு

நுணுக்கம் காண்

நூல் மெல் கல்

நெஞ்சுரம் கொள்

நேரத்தை வெல்

நைதல் மோசம்

நொந்து சாகாதே

நோற்புதவும்


பணம் பொருட்டல்ல

பாரதி பா மதி

பிறப்பெல்லாம் ஒன்று

பீடை கொல்

புகழ் விரும்பாதே

பூச்சி கொல்லாதே

பெருமை சொல்லாதே

பேறு பெரு

பைய நட

பொய்யுரைக்க நாணு

போட்டி வேண்டாம்

பௌதிகம் தெளி


மதவெறி நீக்கு

மானுடம் போற்று

மிருகத்தை அன்பு செய்

மீமிசையறம் கொள்

முட்சொல் தவிர்

மூடவினை எதிர்

மென்கண் பெண்/ஆண் காண்

மேனியணி துற

மையல் மடமை

மொழி இன் தமிழ்

மோகத்தை தீர்

மௌனம் பழகு


யம பயம் நீக்கு

யாக்கை நிலைக்காது

யுத்தம் வேண்டாம்

யூகை வேண்டும்

யோகம் பயில்

யௌவனம் மகிழ்


(இ) ரவி போல் எழு

(இ) ராமன் போல் வாழ்

ரிஷி மூலம் தேடாதே

ருசிக்கடிமை ஆகாதே

ரூபம் பழிக்காதே

ரோகம் தவிர்

ரௌத்திரத்தில் நன்று செய்


வள்ளலார் போற்று

வாழப்புசி

விதி நோவாதே

வீடுபெற படி

வெஃகாமை நன்று

வேட்கை தணி

வைத்தியம் குறை

வௌவுதல் பாவம்

தீசன்

2 கருத்துகள்

  1. சில வார்த்தைகளுக்கு பொருள் புரியவில்லை. சொற்பொருள் சேர்த்து பதிவிடவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கு நன்றி. விரைவில் சொற்பொருள் சேர்க்க முயல்கிறேன்

      நீக்கு
புதியது பழையவை