அண்மை

தமிழார்வம் தேய்கிறது - ஆசிரியர்

 


சமீபத்தில் 'ஆத்திசூடி' சொல்லென ஒரு பள்ளி மாணவனை கேட்டதற்கு அவன் 'ஆத்திசூடி ஆத்திசூடி' என்ற சினிமா பாடலை பாடிக் காட்டினான். அதைப் பார்த்தபோது சிரிப்பாக இல்லை அதிர்ச்சியாக தான் இருந்தது. இதை அவன் விளையாட்டாகவும் சொல்லவில்லை. அவனுக்கு தெரிந்தது அவன் மூளையில் பதிவான 'ஆத்திசூடி' இது ஒன்று தான் போலும். இதற்காக அந்த மாணவனை குறை சொல்வதற்கில்லை. அவனது பள்ளி ஆசிரியர்களையும் குறை சொல்வதற்கில்லை. பெற்றோர்களை குறை சொல்வதற்கில்லை. சினிமா பாடல்களையும் குறை சொல்ல வேண்டியில்லை. பின்னே யாரை குறை சொல்வது எனில், 'நம்மை நாமே கண்ணாடியில் பார்த்து அவமானப்பட்டு கொள்ள வேண்டியது தான்'. ஒரு தனித்துவமான சமூகத்தின் வீழ்ச்சி நம் கண் எதிரே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழார்வம் தேய்கிறது. சரியான தமிழ் உச்சரிப்பு தேய்ந்த போது திருத்த முயன்று பலர் தோற்றார்கள். உச்சரிப்பு சரியில்லாத வார்த்தைகள் இன்று வட்டார வழக்காயிற்று. ஒற்றுப் பிழை அதிகமான போது அதைத் திருத்தவும் முயன்று தோற்றார்கள். இன்று தமிழையே பிழையாக எழுதும் மாணவர்களைக் காண்கிறோம். 'வாழ்த்துகள்' தான் சரி 'வாழ்த்துக்கள்' தவறு என்று இலக்கணமுடன் நிரூபித்தாலும் அதை தர்க்கித்து எதிர்க்கவொரு கூட்டம் முளைக்கிறது. 'அறம் செய்ய விரும்பு' எனத் தொடங்கினாலே சரசரவென ஆறுவது சினம், இயல்வது கரவேல்… என கூறும் முன்னைய தலைமுறை இன்றையத் தலைமுறையைப் பார்த்து நகைக்க மட்டுந் தான் செய்கிறது. திருத்த நடவடிக்கை ஏதும் எடுத்தபாடில்லை. இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் ஆத்திசூடியில் உள்ள 'ஏற்பது இகழ்ச்சிக்கும்' 'ஐயமிட்டு உண்ணுக்கும்' உள்ளத் தொடர்பைத் தமிழ் படித்தோர் ஆய்கிறார்கள். ஆனாலும் பாவம் அவர்களுக்கு தெரியுமா, அதையெல்லாம் படிக்க வருங்காலத்தில் ஆள் இல்லை என்று


ஆசிரியர்

கருத்துரையிடுக

புதியது பழையவை