அண்மை

விவசாயி - கவிதை

 


இறுகிய முகத்தோடு 

பட்டணத்திற்கு பயணச்சீட்டு வாங்கிய 

எத்தனையோ விவசாயிகளில் 

நானும் ஒருவன்…!


வாழ்ந்த வீட்டையும் 

விதைத்த மண்ணையும் 

கூடு கட்டிய குருவிக் கூட்டை 

விட்டு கொடுத்த

நேற்றைய விவசாயி .....!


நெடுவயல் 

நீண்ட பயணம் கடந்த 

எனது அகவை மிச்சத்தை 

பட்டணத்தில் தொலைக்க வேண்டும் ........!


கொல்லைப் 

புறத்தைத் இழந்த

அப்பார்ட்மெண்ட் வீடுகளில்

வாழ்க்கை எனக்களித்த வாய்ப்பு 

வாட்ச்மேன் வேலை ...........!


வரப்புகளிலும் 

கடும் வெயிலிலும் 

காய படாத என் கால்கள் 

வாட்ச்மேன் வேலையில் 

சுடுகிறது ..........!


நேற்றைய திங்கள் 

இன்றைய வெள்ளி என்று 

காலம் நகர்ந்தாலும் 


யாரோ ஒரு விவசாயி 

ஏதோ ஒரு நிலத்தில் 

விளைந்த சோற்றை 

விழுங்கும் போதெல்லாம்

மனதில் மழை 

அடித்துக்கொண்டே இருக்கிறது....!!


கவிஞர் ம.செ

2 கருத்துகள்

  1. வரப்புகளிலும்
    வயல்களிலும்
    காயப்படாத என் கால்கள்
    வாட்ச்மேன் வேலையில்
    சுடுகிறது. அருமை.
    கவிதையை இதோடு முடிக்க வேண்டாம். தொடரவும்....

    பதிலளிநீக்கு
  2. இன்றைய விவசாயிகளின் வாழ்க்கையை அப்படியை சொல்லி விட்டீர்கள்... மிக அருமை

    பதிலளிநீக்கு
புதியது பழையவை