அண்மை

அ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

 

அ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

ஆண் குழந்தை பெயர்கள்


நல்ல தமிழ் பெயர்கள் நாட்டில் குறைந்து விட்டது. பெரும்பாலான தமிழர்களுக்கு தமிழ் பற்று இல்லாததும் வடமொழி கலப்புள்ள தாய் தந்தை பெயரை அப்படியே பிள்ளைக்கு வைக்கத் துணிவதும் வடமொழி பெயர்களில் இருக்கும் மோகமும் இதற்கு காரணமாகும். உங்களது பிள்ளைகளுக்கு நல்ல தமிழ் பெயரை வைக்க தயங்காதீர்கள். தமிழே நமது அடையாளம். இந்த பதிவில் அ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் தரப்பட்டு உள்ளது. அதனை பயன்படுத்தி கொள்ளவும். நீங்கள் தேர்வு செய்த பெயருக்கான அர்த்தம் அல்லது இதற்கு முன்னே நீங்கள் தேர்வு செய்து வைத்திருக்கின்ற பெயர் தூய தமிழ்ச் சொல் தானா? என்பதை தெரிந்து கொள்ள எங்களது வாட்சப் எண்ணை தொடர்பு கொள்ளவும்


அ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்


1. அகரன் - எழுத்தின் முதல் போன்றவன்

2. அகரமுதல்வன்    

3. அகத்தியன்

4. அகவழகன் - அழகான உள்ளத்தினை கொண்டவன்

5. அகமுடைநம்பி

6. அஞ்சி - தலைவன் என்னும் பொருள் தரும் சொல்

7. அஞ்சாநெஞ்சன் - பயமற்றவன்

8. அஞ்சனவண்ணன் - கருவண்ணம் கொண்டவன்

9. அஞ்சனமழகியபிள்ளை

10. அஞ்சையன்

11. அசோகன்

12. அடலேறு - வலிமை கொண்டவன்

13. அடல்எழிலன்

14. அடியார்க்கடியான்

15. அடியார்க்குநல்லான்

16. அடிகளாசிரியன்

17. அடைக்கலன்

18. அடைக்கலம்காத்தான்

19. அடைக்கலநம்பி

20. அடைக்கலமணி - அடைக்கலம் தருவதில் உயர்ந்தவன்

21. அடைக்கலமுத்து

22. அண்ணல்

23. அண்ணல்தங்கோ

24. அண்ணல்நம்பி

25. அண்ணல்முத்து

26. அண்ணாமலை

27. அண்டிரன்

28. அத்தன் - செல்வ செழிப்பு கொள்பவன்

29. அத்தியப்பன்

30. அதியமான்

31. அதிவீரன்

32. அதிவீரபாண்டியன்

33. அதிகுணன் - நிறைந்த குணம் கொண்டவன்

34. அதியன் - மேலானவன்

35. அந்திவண்ணன்

36. அந்துவன் - நன்கு கற்றவன்

37. அந்தோளன்

38. அப்பர் - மரியாதைக்கு உரியவன்

39. அப்பன்

40. அப்பையா

41. அப்பூதி - திருநீறு அணிந்தவன்

42. அப்பாக்கண்ணு

43. அப்பாப்பிள்ளை

44. அம்பன்

45. அம்பலன் - ஈசன் இருக்கைக்கு ஒப்பானவன்

46. அம்பலவாணன்

47. அம்பலத்தரசன்

48. அம்பலத்தாடி

49. அம்மூவன்

50. அம்மையப்பன் - தாய் தந்தையை ஒத்தவன்

51. அமிழ்து

52. அமிழ்தரசன்

53. அமிழ்திறைவன்

54. அமுதன் - அமுதம் போன்றவன்

55. அமுதோன்

56. அமுதவாணன்

57. அமுதரசன்

58. அரங்கன் - மாயோனை ஒத்தவன்

59. அரங்கரசன்

60. அரவரசன்

61. அரங்கமுத்து

62. அரங்கத்தம்பி 

63. அரங்கமணி

64. அரங்கண்ணல்

65. அரங்கண்ணன்

66. அரசன் - தலைவன் போன்றவன்

67. அரசமலை

68. அரசர்க்கரசன்

69. அரசேந்திரன்

70. அரசமணி

71. அரசவேந்தன்

72. அரசிளங்கோ - இளவரசன் போன்றவன்

73. அரசிறைவன்

74. அரசு

75. அரசுமலை

76. அரசுமணி

77. அரசுநம்பி

78. அரசுச்சுடர் - தீப்போன்ற தலைவன்

79. அரசுமதி

80. அரசுநிதி

81. அரன் - நெருப்பு போன்றவன்; எப்பொருட்கும் இறை

82. அரணமுறுவல்

83. அரவணியான்

84. அரிசில்கிழான்

85. அரியநாயகம் - அரிதான தலைவன் போன்றவன்

86. அரியபிள்ளை

87. அரியமணி

88. அரியமுத்து

89. அரிமா - சிங்கம் போன்றவன்

90. அரிமாகோ - சிங்கத் தலைவன்

91. அரிமாச்செல்வன்

92. அரிமாப்பாண்டியன்

93. அரிமாத்தங்கம்

94. அருகன் - சமணக் கடவுள்; அறங்களில் சிறந்தவன்

95. அருங்கலநாயகன்

96. அருங்கலமணி

97. அருங்கலநம்பி

98. அருங்கலமுத்து

99. அருண் - சூரியனைப் போன்றவன்

100. அருண்மொழி

101. அருண்மொழித்தேவன் - சூரியனுக்கு நிகரான மொழிவளம் கொண்டவன்

102. அருண்மொழி வேந்தன்

103. அரும்பன்

104. அருள் 

105. அருளி - இரக்கம் நிறைந்தவன்

106. அருளரசு

107. அருளரசன்

108. அருளப்பன் - இரக்க குணத்திற்கு தந்தை போன்றவன்

109. அருளம்பலம்

110. அருளாளன்

111. அருளாளி - இரக்கத்தை அனைவருக்கும் அளிப்பவன்

112. அருளுடைநம்பி 

113. அருள் தரும் பெருமாள்

114. அருள்நாயகம்

115. அருள்வடிவேல்

116. அருள்நம்பி

117. அருள்நிலவன் - தண் போன்ற குளிர்ச்சியை உடையவன்

118. அருள்மணி

119. அருள்வேள்

120. அருள்வேல் 

121. அருட்பாண்டி

122. அருட்கண்ணன் 

123. அருட்சுடர் - தீப்போன்று அருளை வளர்ப்பவன்

124. அருட்செல்வன் 

125. அருட்செல்வம்

126. அருட்குமரன்

127. அருட்குன்றன்

128. அருமருந்தன் - அனைத்திற்கும் மருந்து போன்றவன்

129. அருமைக்கண்ணன்

130. அருமைக்கண்ணு

131. அருமைச்செல்வம்

132. அருமைமணி - நல்ல குணங்களுக்கு அணிகலன் போன்றவன்

133. அருமைமுத்து

134. அருமை நாயகம்

135. அருமையரசன் 

136. அருமைப்பாண்டியன்

137. அவைக்கஞ்சான்

138. அவை நாயகம்

139. அவையரசு - தலைமை பண்பு மிக்கவன்

140. அவைநம்பி

141. அவைச்செல்வம்

142. அழகர்

143. அழகர்நம்பி

144. அழகன் - அழகானவன்

145. அழகரசு

146. அழகரசன்

147. அழகப்பன் - அழகிய திருமதிப்பு கொண்டவன்

148. அழகடியான்

149. அழகமுத்து

150. அழகிய கூத்தன் - அழகிய ஈசனுக்கு ஒப்பானவன்

151. அழகிய பெரியவன்

152. அழகுருவன் - அழகான உருவத்தினை கொண்டவன்

153. அழகிய சிற்றம்பலம்

154. அழகிய சோழன்

155. அழகிய பல்லவன்

156. அழகிய பாண்டியன் - அழகிய வடிவில் பாண்டிய நகரில் பிறந்தவன்

157. அழகிய சேரன்

158. அழகிய பெருமாள்

159. அழகியவாணன்

160. அழகிய மணவாளன்

161. அழகுமணி - அழகினையே அணிகலனாய் கொண்டவன்

162. அழகுமணிவேல்

163. அழகையன்

164. அழகுமுருகன்

165. அழகோவியன் - அழகு பொருந்திய ஓவியம் போன்றவன்

166. அழகுபாண்டியன்    

167. அழகுமலை

168. அழகு திருமலை

169. அழகுநம்பி

170. அழகுமுத்து

171. அழகு முத்துக்கோன்

172. அழகுவேல்

173. அழகுவேள் - அழகு பொருந்திய முருகனுக்கு ஒப்பானவன்

174. அளப்பருங்கடலான்

175. அளப்பருந்தேவன்

176. அறவன் - அறத்தால் ஆனவன் / புத்தருக்கு ஒப்பானவன்

177. அறம் வளர்த்தான்

178. அறம் வளர்த்த நம்பி

179. அறம் வளர்த்த நாயகன் - நல்லவற்றை செய்யத் துடிக்கும் நாயகன்

180. அறம் வளர்த்த தம்பி

181. அறம் வளர்த்த பெருமாள்

182. அறம் காத்தான்

183. அறம் காத்த நம்பி

184. அறம் காத்த முத்து

185. அறம் காத்த வேல்

186. அறம் காத்த வேள் - அறம் காக்கும் முருகன் போன்றவன்

187. அறவாழி

188. அறவணன்

189. அறவாணன்

190. அறிவன் - அறிவானவன்

191. அறிவரசு

192. அறிவரசன்

193. அறிவுமதி

194. அறிவொளி - ஒளி பொருந்திய அறிவு உடையவன்

195. அறிவுக்கனி

196. அறிவுமுத்து

197. அறிவுக்கரசு

198. அறிவுக்கொழுந்து

199. அறிவுச்சுடர் - சுடர் போன்ற அறிவு உடையவன்

200. அறிவுடையரசு

201. அறிவுச் செல்வன்

202. அறிவுச் செல்வம்

203. அறிவு நம்பி

204. அறிவுடை நம்பி - ஆண்களில் சிறந்த அறிவுடையவன்    

205. அறிவாணன்

206. அறிவுமணி

207. அறிவழகன்

208. அறிவழகு - அறிவுக்கு அழகானவன்

209. அறிவண்ணல்

210. அறிவுடையரசன்

211. அறிவுக்கடலான்

212. அறிவுக்கனல் - அறிவினை கனலாய்க் கொண்டவன்

213. அறிவுருவோன்

214. அறிவுறுவோன்

215. அறின்

216. அறுபடையோன் - தமிழ் கடவுள் முருகனுக்கு ஒப்பானவன்

217. அறுமீன்அரசு

218. அறுமீன்முத்து

219. அறுமீன்நம்பி

220. அறுமீன் மணி - கார்த்திகையை அணியாய் கொண்டவன்

221. அறுமீன் செந்தில்

222. அறுமீன் வேல் - கார்த்திகையில் வேல் போன்றவன்

223. அன்பு

224. அன்புப்பழம்

225. அன்புக்கனி

226. அன்புப்பழம்நீ

227. அன்புமணி - அன்பினை அணிகலனாய் கொண்டவன்

228. அன்புமுத்து

229. அன்புநம்பி

230. அன்புடைநம்பி 

231. அன்புநிலவன் - குளிர்ச்சி பொருந்திய அன்புள்ளம் கொண்டவன்

232. அன்புவேல்

233. அன்புத்தம்பி

234. அன்புமுருகன்

235. அன்புவாணன்

236. அன்புமன்னன்

237. அன்புநாடன் - அன்பை நாட்டுபவன் / அன்பை நாடுபவன்

238. அன்புச் செழியன்

239. அன்புப்பாண்டியன்

240. அன்புச் சோழன்

241. அன்புச் சேரன்

242. அன்பரசு - அன்பிற்கு அரசன் போன்றவன்

243. அன்பரசன்

244. அன்பண்ணல்

245. அன்பழகன் - அன்பினை அழகாய் கொண்டவன்

246. அன்பழகு

247. அன்பாளன்

248. அன்பிற்கரசு

கருத்துரையிடுக

புதியது பழையவை