அண்மை

பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலி காரணமும் தீர்வும்

 

பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலி காரணமும் தீர்வும்

இன்றைய காலத்தில் 45 வயதை கடந்த பெரும்பாலான பெண்கள் மூட்டு வலியால் அவதிப்படுகிறார்கள். மூட்டு வலி மட்டுமல்லாது உடல் முழுதும் வலியால் அவதியுறும் பெண்கள் அதிகம். மூட்டு வலி என்பது வயதானவர்களுக்கு மட்டும் வரும் நோய் அல்ல. 10 வயதுடையோரில் இருந்து 100 வயது கடந்தவர் வரைக்கும் மூட்டுவலி வரும், இருந்தாலும் 45 வயதை கடந்த எல்லா பெண்களுக்குமே மூட்டுவலியும் உடல் பருமனும் ஏற்படுவது இன்று சகஜமாகி வருகிறது. அது எதனால் என்ற காரணம் புரியாமலே பெண்கள் உடற்பயிற்சியினாலும் டயட் இருந்தும் சரியாக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். சிலர் சுடுநீரில் தேன் கலந்து குடிப்பதால் உடல் எடை குறையும் என்றும் நம்புகிறார்கள். இது முற்றிலும் தவறான மனநிலை.


45 வயதுக்கு பிறகு பெண்களுக்கு மூட்டுவலி ஏன் ஏற்படுகிறது?


அதிக நேரம் நிற்பவருக்கு மூட்டுவலி ஏற்படலாம் ஆனால் கொஞ்சம் இளைபாறினாலே அந்த வலி குறையும். 45 வயது முதல் 55 வயது வரை பெண்களுக்கு மெனோபாஸ் காலமாகும். மாதவிடாய் படிபடியாக குறைந்து முழுமையாக நிறுத்தப்படுவதே இந்த மெனோபாஸ் காலமாகும். மெனோபாஸ் காலத்தில் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் இழப்பு ஏற்படுகிறது. இதனால் உடலில் கால்சியம் குறைவு ஏற்பட்டு எலும்பு தேய்மானம் உண்டாகிறது. இதனால் மூட்டு வலி ஏற்படுகிறது.


மாதவிடாய் நிற்பதற்கும் மூட்டுவலிக்கும் என்ன தொடர்பு?


45 வயது கடந்த பெண்களுக்கு மாதவிடாய் படிப்படியாக நிறுத்தப்படுகிறது. இது இயல்பானதே ஆகும். ஆனால் இந்த மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு அளவுக்கு அதிகமாக விடாய் வெளியேற்றம் நடக்கும். இதனால் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அளவு குறைகிறது. ஈஸ்ட்ரோஜனின் பெரும் இழப்பு உடலில் உள்ள கால்சியத்தை பாதிக்கிறது இதனால் 45 வயதுக்கு பிறகு பெண்களுக்கு படிப்படியாக எலும்புத் தேய்மானம் ஏற்படுகிறது.


மாதவிடாய் இழப்பிற்கு பிறகு உடல் எடை அதிகரிக்குமா?


ஆம். மெலிந்து இருக்கும் பெண்களுக்கு கூட மெனோபாஸ் கட்டம் முடிவடையும் தருணத்தில் உடல் பருமன் கூடத் துவங்குகிறது. ஈஸ்ட்ரோஜன் குறைவதால் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் உடல் பருமனை அதிகரிக்கிறது. தலைச்சுற்றல் அல்லது இதயத் துடிப்பில் மாற்றம் போன்றவை மாதவிடாய் நிற்கும் காலத்தில் பெண்கள் அனுபவிக்கும் ஒன்று. ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் உங்கள் உடல் ஃப்ளெக்ஸிபில் ஆர்ட்ரீஸ்களை தக்க வைத்துக் கொள்ளும். இது இரத்த ஓட்டத்தை பாதிக்கும். இதனால் இதய நோயும் உண்டாகலாம்.


மூட்டுவலியை தவிர்க்கும் வழி


45 வயதினை எட்டிய பெண்கள் மெனோபாஸ் காலத்தை தவிர்க்க முடியாது. அது இயற்கையாக நடந்தே தீரும். ஆனால் இழக்கும் ஈஸ்ட்ரோஜன் அளவினை மீட்டுருவாக்கம் செய்வதன் மூலம் பெண்கள் மெனோபாஸ்க்கு பின் ஏற்படும் உடல் பருமன் மற்றும் எலும்பு தேய்மானத்தை தடுக்க முடியும்.


ஈஸ்ட்ரோஜன் அதிகமான உணவுகள்


அதிக மாதவிடாய் இழப்பு தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே ஈஸ்ட்ரோஜன் அதிகமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் பெண்கள் தங்களை எலும்பு தேய்மானத்தில் இருந்தும் உடல் பருமன் ஆவதிலிருந்தும் தற்காத்து கொள்ள முடியும். கீழே உள்ள இந்த உணவுகளை போதுமான அளவு உட்கொள்வதன் மூலம் உடலின் ஈஸ்ட்ரோஜன் அளவினை அதிகரிக்கச் செய்யலாம். 


  • ஆளி விதைகள் (buy here)
  • சோயா பீன்ஸ் (buy here)
  • உலர் திராட்சைகள் (buy here)
  • டோஃபு (buy here)
  • பால் பொருட்கள்


ஆளி விதைகள்


ஆளி விதைகள் சிறிய, தங்க அல்லது பழுப்பு நிற விதைகள், அவற்றின் சாத்தியமான ஆரோக்கிய நன்மைகள் காரணமாக சமீபத்தில் அதிக விற்பனையை பெற்றுள்ளன.


அவை பைட்டோ ஈஸ்ட்ரோஜன்களாக செயல்படும் வேதியியல் சேர்மங்களின் குழுவான லிக்னான்களில் நம்பமுடியாத அளவிற்கு நிறைந்துள்ளன.  உண்மையில், ஆளி விதைகளில் மற்ற தாவர உணவுகளை விட 800 மடங்கு அதிக லிக்னான்கள் உள்ளன.


ஆளி விதைகளில் காணப்படும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன, குறிப்பாக மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஆளி விதைகள் அதிக பலனைத் தருகின்றது. மாதவிடாய் நிற்கும் பெண்கள் ஆளி விதைகளை உட்கொள்வதன் மூலம் குறையும் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கிறது. இதனால் பெண்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மானம், உடல் பருமனை தவிர்க்க முடிகிறது


எலும்பு தேய்மானத்திற்கு பாட்டி வைத்தியம்


முன்பு பெண்கள் வளர்சிதை மாற்றத்தை அடைந்த பருவத்தில் இருந்தே உளுந்து களி தரத்தொடங்குவார்கள். இது ஈஸ்ட்ரோஜன் அளவினை சமநிலை செய்து கால்சியத்தையும் புரோட்டினையும் அதிகரிக்கிறது இதனால் எலும்புத் தேய்மானம் ஏற்படுவதையும் உடல் பருமன் ஆவதையும் பெண்கள் தவிர்த்தார்கள். ஆனால் இன்று இவற்றைக் கூறக்கூட ஆட்கள் இல்லை. தென்றல் இதழ் மூட்டுவலி குணமாக வீட்டு மருத்துவம் தொகுத்து உள்ளது. 45 வயது கடந்த அனைத்து பெண்களுமே மூட்டு வலிக்கும் உடல் பருமனுக்கு ஆளாகின்றனர். உளுந்த களி மற்றும் கேழ்வரகு களி போன்றவற்றை நீங்களோ அல்லது உங்களது பெண் குழந்தைகளுக்கோ கொடுத்து பழகுங்கள். எதிர்காலத்தில் எலும்பு தேய்மானத்தைப் பற்றிய கவலையில்லாமல் வாழ அது வழி கொடுக்கும்

கருத்துரையிடுக

புதியது பழையவை