அண்மை

அம்மா - கவிதை

 

அம்மா - கவிதை

நான் பூத்த புவியை

உதிரத்தில் என்னை ஏற்றி

கருப்பையில் விதைத்தவளே

 

உள்ளொரு இடம் தந்து

எனை பயிர் செய்தவளே

 

புவியீர்ப்பு விசை இருந்தும்

என்னை விடாமல் சுமந்தவளே

 

நான் பூத்த  புவி 

வாழ்க்கையின்  

முதல் பகுதி

 

இன்பமோ துன்பமோ

எதுவும் கிடையாது

 

ஆனால் சிரிக்க மட்டும்

நுழைவுச்சீட்டு விற்கப்படும்

 

அது ஒரு அழகிய தீவு

என்னை நிரம்பியிருக்கும்

அழகான நினைவு

 

எனக்கும் அவளுக்கும்

தனி பாஷைகள் பரிமாறப்பட்டன

 

எழுத்துக்களிள் எழுந்து நிற்காத

சில பாஷைகள் அவை

 

காதலில் கூட

ஒருயிர் ஈருடல்

 

ஓர் உடல்

ஈருயிர் சுமந்தவள் அவள்

 

அவள்தான்

என்னை சுற்றி இருக்கும் சமுத்திரம்

 

அவள் பார்வை தான்

என்னை ஒளிச்சேர்க்கை செய்யும் சூரியன்

 

தொப்புள் கொடி தான்

புவியீர்ப்பு விசை

 

கண் திறக்காமலேயே

அந்த பூமியின் அழகை துதித்து இருக்கிறேன்

 

கருவறையிலேயே பத்து மாதம் கடும் தவத்தால்

இறைவன் தோன்றினார்

என்ன வேண்டும் கேள் என்றார்

 

உடனே பிரிவு வேண்டாம்

என் தாயின் கருவறை போதும் என்றேன்


கடவுள்

கல்நெஞ்சுக்காரன்

பொறாமைக்காரன்

நீ கேட்ட இன்பம் எனக்கு கிட்டிருந்தால்

உன் முன்னால்

நான் ஏன் மாட்டி இருப்பேன் என்றார்

 

என்னை பூமியில் பிறக்கக் கடவாய்

என சபிக்க தொடங்கினார்

 

தனிமையை ரசித்திருக்கிறேன்

பிறக்க நேர்ந்தால்

பிரிவு  நிச்சயம்

அப்படி பிரிவு நேர்ந்தால்

அத்தனை முறையும்

இறந்தே பிறக்கிறேன்

 

ஆனால்

மீண்டும் உன் கருவறையில்

கண்மூடி முளைக்கிறேன்


கவிஞர் ம.செ

3 கருத்துகள்

  1. மிகவும் அழகு. அவள் தான் என்னை சுற்றி இருக்கும் சமுத்திரம்

    அற்புதமான உவமை கவிஞரே❤️❤️😇

    பதிலளிநீக்கு
  2. கவிதை மிக அருமை வாழ்க வளர்க

    பதிலளிநீக்கு
  3. சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை