அண்மை

ஜவஹர்லால் நேரு பற்றிய கட்டுரை

 

ஜவஹர்லால் நேரு பற்றிய கட்டுரை




முன்னுரை


விடுதலைப் போராட்ட இயக்கத்திலேயே பெரும் பங்கு வகித்தவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆவார். விடுதலைப் போராட்ட இயக்கத்தில் அடி எடுத்து வைத்த காலம் முதற்கொண்டு சுதந்திர பாரதத்தின் முதல் பிரதமராக திகழ்ந்த காலம் வரை ஒரு வினாடி கூட ஓய்வு ஒழிச்சல் இன்றி உழைத்த தேச பக்த மாமணி நேருஜி ஆவார். 


‘ஆசிய ஜோதி' என்று அகில உலகமும் போற்றிப் புகழும் அளவுக்கு பெருமைப்பட வாழ்ந்தவர் நேரு. காந்திஜி ஏற்றி வைத்த சுதந்திர தீபத்தை அணையாமல் தொடர்ந்து பிரகாசிக்க அயராது உழைத்த பெரும் புகழும் நேர்வையே சாரும். ஜவஹர்லால் நேரு பற்றிய கட்டுரை ஆசிய ஜோதியின் மகத்துவத்தை எடுத்துரைக்கிறது.


நேருவின் பிறப்பு


ஜவஹர்லால் நேருஜி 14-11-1889ல் அலகாபாத்தில் பிரபுல வழக்கறிஞராக இருந்த மோதிலால் நேருவுக்கும், சொரூப ராணிக்கும் புதல்வராகப் பிறந்தவர். 


பிள்ளைப் பருவத்திலே அராபிய பெண்மணி ஒருவரின் மேற்பார்வையில் வளர்ந்த இவர் ஐரிஸ் நாட்டைச் சேர்ந்த பெர்ஷ்ண்ட்ப்ருஸீனிடம் கல்வி பயின்றார். கல்வியில் அளவற்ற ஆர்வமும், இலக்கியத்தில் பெரிய ஈடுபாடும் நேருஜி கொண்டதற்கு அவருடைய சிறுவயது ஆசிரியரே காரணமாகும். 


➤ ஒரு லட்ச ரூபாய் பரிசு போட்டி கட்டுரை


இளமைப் பருவம்


இவருக்குப் பதினைந்து வயது இருக்கும் போது, இங்கிலாந்தில் ஹாமாரவில் படிக்க சேர்க்கப்பட்டார். இத்தாலிய வீரன் கரிபால்டியின் வரலாற்றைப் படித்த இவர் இந்திய நாட்டின் விடுதலைக்குப் போராட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கிக் கொண்டார். 1907 இல் பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் சர்வகலா சாலையைச் சேர்ந்த டிரினிடி கல்லூரியில் கல்வி கற்றார். பிரிட்டிஷ் பிரதமர்களின் பயிற்சி முகாம் என்று புகழ் பெற்றிருந்தது அந்தச் கல்லூரி அங்கு தான் ஜவஹர்லால் நேருவுக்கு சோஷலிஸத்தில் ஆர்வம் பிறந்தது. பின் லண்டனுக்கு சட்டப் பயிற்சிக்காகச் சென்றார். 


முதல் மேடை


ஏழு ஆண்டுகள் இங்கிலாந்தில் படித்து விட்டு 1912 ஆகஸ்டில் இந்தியா திரும்பினார். இந்தியாவில் மறுமலர்ச்சி பொங்கி எழுந்த தருணம் அது. வங்கப் பிரிவினை காரணமாக கிளர்ச்சிகள் வலுத்திருந்த காலம் அது. பிரிட்டிஷ் முறையில் கல்வி கற்றதன் விளைவாக இந்தியாவில் பிரிட்டிஷார் கடைப்பிடித்த இனப்பாகுபாடுக் கொள்கையை இவர் வெறுத்தார். வக்கீல் தொழில் இவருக்கு உப்புச்சப்பின்றி இருந்ததால், தனக்குப் பிடித்தமான அரசியலில் ஈடுபட்டார். ஐக்கிய மாகாண காங்கிரசில் சேர்ந்து 1915 - இல் அலகாபாத்தில் முதல் முதலாக மேடை ஏறிப் பேசினார். வழக்கறிஞர்களில் பெரும் மேதை எனக் கருதப்பட்ட சாப்ரூ, மேடைக்கு வந்து ஜவஹர்லால் நேருவை பாராட்டினார்.


காந்தியும் நேருவும்


ஐக்கிய மாகாணத்தில் விவசாயிகளின் துன்பம் துடைக்க பண்டித மதன் மோகன் மாளவியா துவக்கிய இயக்கத்தில் இவர் பங்கு கொண்டார். மேனாட்டு ஆடைகளை நீக்கி, சுதேசி உடையை அணியத் தொடங்கினார். காந்தியடிகளை, டிசம்பர் 1915 - இல் சந்தித்தார். காந்தியடிகள் விடுத்த ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரப் பங்கு கொண்டு நாடு முழுவதும், ரௌலட் சட்டத்திற்கு எதிராக ஹர்த்தாலை அனுஷ்டிக்கச் செய்தார். பஞ்சாப் ஜாலியன்வாலா பாக்கில் நடந்த படுகொலையைக் கண்ட இவர் வெள்ளையர்களை எப்படியும் விரட்டியே தீருவது என்று தீர்மானித்தார். 1920 இல் கேரளாவில் இந்து, முஸ்லீம் வகுப்புக் கலவரம் ஏற்பட்டு நாடு முழுவதும் பரவியது. இதனால் இந்தியாவை மதச் சார்பற்ற தன்மையுடைய நாடாக ஆக்குவதாக உறுதி செய்து கொண்டார். 1925 - இல் இவர் மனைவி கமலாவிற்கு உடல் நிலை கெட்டதால், சிகிச்சைக்காக மனைவியை ஐரோப்பா அழைத்துச் சென்றார். அப்படியே தமது தந்தையுடன் ரஷியா சென்று “ரஷியப் புரட்சியை ஆராய்ந்து, ரஷியாவுடன் இந்தியா நெருங்கிய நட்புறவு கொள்ள வேண்டும்" என உறுதி கொண்டார். 


1926 - இல் சென்னையில் நடைபெற்ற 42வது காங்கிரஸ் மகாநாட்டில் பூரண தேசிய சுதந்திரத்தை அடைவதே காங்கிரசின் லட்சியம் என அறிவித்தார். 1927 இல் பர்டோலியில் நிலவரி உயர்வை எதிர்த்து படேல் சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்திருந்தார். உப்புச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக நேருவுக்கு ஆறுமாதச் சிறை தண்டனை கிடைத்தது. 


வைஸ்ராய் இர்வின் பிரபு, காங்கிரசுக்கும், அரசாங்கத்திற்கும், சமரசம் செய்யும் நோக்குடன் பிரிட்டிஷ் இந்தியத் தலைவர்களின் வட்ட மேஜை மாநாட்டைக் கூட்ட முயன்றார். இதை நேரு வரவேற்றாலும், வைஸ்ராயின் உட்கருத்தை உணர்ந்து, சுபாஷ் சந்திரபோஸ் உடன் தானும் காங்கிரஸ் காரியக் கமிட்டியிலிருந்து ராஜினாமா செய்தார். பிறகு பல தலைவர்களின் மத்தியஸ்தத்தின் பேரில் வேண்டா வெறுப்புடன் அதை ஏற்றார். இதன் பின் காந்தி இர்வின் ஒப்பந்தம் 4-3-1931இல் கையெழுத்தாயிற்று .


➤ விடுதலைப் போரில் நேரு


காங்கிரஸ் வெற்றி


லட்சுமணபுரியில் 3-4-1936 இல் நடந்த 49 வது காங்கிரஸ் மாநாட்டிற்கு நேரு தலைமை வகித்தார். காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடுவதை இவர் ஒப்புக் கொண்டாலும், காங்கிரஸ்காரர்கள் எந்தப் பதவியையும் ஏற்றுக் கொள்வதை எதிர்த்தார். இவர் கருத்துக்கு  பூரண ஆதரவு இல்லாததால், தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மாகாணங்களில் மந்திரி சபையை அமைத்தது. 9-12-1936 இல் பஸிபூர் காங்கிரஸ் மாநாட்டிற்கும் தலைவராக மீண்டும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அமைத்தது இதன் மூலம் இந்தியா திட்டமிட்ட முறையில் முன்னேறுவதற்கு அவர் அஸ்திவாரமிட்டார். 


நேருவின் சமரசம்


1938 நவம்பரில், திரிபுரா, காங்கிரசுக்கு காந்தியடிகளின் விருப்பத்திற்கு எதிராக சுபாஷ் சந்திர போஸ் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். இதனால் நேருவைத் தவிர மற்ற காரியக் கமிட்டி உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர். நேரு, காந்தியடிகளும், போசுக்கும் இடையே சமரசம் செய்ய முயன்றார். இவரது முயற்சி தோல்வியுறவே போஸ் தம் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பார்வர்டு பிளாக் கட்சியை ஆரம்பித்தார். காங்கிரசுக்கு ராஜேந்திர பிரசாத் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். 


நேருவுக்கு சிறை


சியாங்கே ஷேகின் அழைப்பிதழ் கிணங்க 1939 இல் சீனாவிற்கு இவர் சென்றார். ஆனால் 3-9-1899இல் இரண்டாவது உலகயுத்தம் உண்டாகிவிடவே நாடு திரும்பினார். இந்த யுத்தம் ஏகாதிபத்தியத்துக்கும், பாசிஸத்திற்கும் நடைபெறும் போர் என நேரு வர்ணித்தார். யுத்தத்தில் இந்தியா பங்கு கொள்ளவும் பிரிட்டன் மற்ற தேச நாடுகளுடன் சேர்ந்து போராட முதலில் இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிக்க வேண்டும் என நேரு கூறியதை காங்கிரஸ் காரியக் கமிட்டி ஏற்றுக் கொண்டது. வைஸ்ராய் லின்லித்கோ பிரபு உடனடியாக அதிகாரத்தை இந்தியரிடம் மாற்ற மறுத்து விட்டார். அத்துடன் ஜின்னா தலைமையில் முஸ்லீம் லீக் காங்கிரசுடன் சேர்ந்து பாடுபட மறுத்தது. 1941 நவம்பரில் காந்தியடிகள் தனி நபர் சத்தியாக் கிரகத்தைத் தொடங்கினார். நேருஜி இரண்டாவது சத்தியாக கிரகத்தைத் தேசப் போரில் இறங்கினார். நேருவிற்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை இதனால் கிடைத்தது. 


➤ நேருவும் குழந்தைகளும் கட்டுரை


டிஸ்கவரி ஆப் இந்தியா


உலக யுத்தத்தில் பிரிட்டிஷாருக்கு நெருக்கடியான நிலை ஏற்பட்ட போது நேருவைச் சிறையில் அடைத்து வைப்பதால் ஏற்படக் கூடிய அபாயத்தை உணர்ந்தது அரசாங்கம். உடளே நேருவை விடுதலை செய்தது. அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், மார்ஷல் சியாங்கே ஷேக் இவர்கள் தலையீட்டின் பேரில், பிரிட்டிஷ், பிரதமர் சர்ச்சில், ஸ்டாபோர்டு கிரிப்ஸை அனுப்பி காங்கிரஸ் முஸ்லீம் லீக்கிடையே அரசியல் சமரசம் செய்யத் துணிந்தார். 3-8-1942இல் காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்தை துவக்கி இருந்தார். அதில் போராடிய நேருவை ஆங்கில சிறையில் அடைத்தது. அகமத் நகர் கோட்டைச் சிறையில் இருந்த மூன்று ஆண்டு காலத்தில் தனது புத்தகமான "டிஸ்கவரி ஆப் இந்தியா"வை எழுதி முடித்தார். 


கருத்து வேறுபாடு


லார்டுவேவல் இந்திய வைஸ்ராயாக பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சிலால் அனுப்பப்பட்டார். இவர் சிம்லாவில் தலைவர்களைக் கூட்டி சமரசம் செய்ய முயன்று தோல்வியுறவே லண்டன் சென்றார். இந்தியாவில் பொதுத் தேர்தல் நடத்த உத்திரவிடவும், அரசியல் நிர்ணய சபை அமைக்கும் யோசனையுடன் வேவல் திரும்பி வந்தார். தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் எட்டு மாகாணங்களிலும், இரண்டு மாகாணங்களில் முஸ்லீம் வீக்கும் மந்திரி சபையை அமைத்தன. பஞ்சாப்பில் யூனியனிஸ்டு கட்சி, காங்கிரஸ் ஆதரவுடன் மந்திரி சபையை அமைத்தது. பிரிட்டிஷ் பிரதமராக வந்த லார்டு ஆட்லி, லார்டு பெதிக் லாரன்ஸ் தலைமையில் மூவர் அடங்கிய காபினெட் மிஷனை அனுப்பி வைத்தார். இக்காபினெட் மிஷன் தற்காப்பு, செய்தித் தொடர்பு வெளிவிவகார அலுவல்கள் இவைகளை மத்திய யூனியன் கவனிக்க வேண்டும் என்ற சட்டத்தைத் தயாரித்தது. மூன்று விதமான் மாகாணப் பிரிவினையையும் கூறியது . இப்பிரிவினையில், காங்கிரசுக்கும், முஸ்லீம் லீக்குக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது


காங்கிரஸ் தலைவர்


நேரு 10-7-1946இல் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்ததெடுக்கப்பட்டார். முஸ்லீம் லீக் தலைவர் பாகிஸ்தானைப் பெற நேரடி நடவடிக்கைகளில் இறங்கினார். 2-9-1946இல் நேருவை இடைக்கால சர்க்காரை அமைக்கும்படி வேவல் கூறினார். நாட்டில் குழப்பம் ஏற்பட்டன. நேருவையும், லீக் தலைவர் ஜின்னாவையும் லார்டு ஆட்லி லண்டனுக்கு அழைத்தார். நேரு லண்டனிலிருந்து திரும்பியதும், அரசியல் நிர்ணய சபை 9-12-1946இல் கூடியது. முஸ்லீம் லீக் இதைப் பகிஷ்கரித்தது. இச்சபை இந்திய அரசியல் அமைப்பில் ஈடுபடும் என நேரு கூறினார்.


இந்தியா-பாக் பிரிவு


இக்கட்டான நிலைமைக்கு முடிவு காண பிரிட்டிஷ் சர்க்கார் மவுண்ட் பேட்டன் பிரபுவை வைஸ்ராயாக அனுப்பி வைத்தது. இதை அடுத்து 1948 ஜுன் மாதத்தில் இந்தியாவை விட்டு பிரிட்டன் வெளியேறும் என அறிவித்தது. லீக் பிரிவினையை வற்புறுத்தியது நாட்டில் இந்து முஸ்லீம் கலகங்கள் தோன்றின. வேறு வழியின்றிப் பிரிவினையைக் காங்கிரஸ் ஏற்க வேண்டியதாயிற்று. 2-6 1947 இல் பிரிவினைத் திட்டம் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் காரியக் கமிட்டி இதை அங்கீகரித்தது. லார்டு மவுண்ட் பேட்டனை முதல் கவர்னர் ஜெனரலாக வைத்துக் கொள்ள நேரு தீர்மானித்தார். அதே சமயம் ஜின்னா தன்னை பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரல் என நியமித்துக் கொண்டார். 15-8-1947இல் சுதந்திர இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்பட்டன. 


➤ ரோஜாவின் ராஜா நேரு கட்டுரை


காந்தி மரணம்


நாடு பிரிவினை காரணமாக இந்துக்கள் சீக்கியர்கள் அகதிகளாக பிரிவிளையான இந்தியாவிற்கு வந்து சேர்ந்தார்கள். முஸ்லீம்கள் பாகிஸ்தான் பகுதிக்குச் சென்றனர். மகாத்மா காந்தி அவர்கள் இந்தியா, ஜாதி மதமற்ற ஜனநாயக நாடாகத் திகழும் என வகுப்பு ஒற்றுமைக்காகப் பாடுபட்டார். மக்கள் வகுப்புக் கலவரமின்றி வாழ போராடினார் . இதனால் இந்து மத தீவிரவாதிகளின் கோபத்திற்கு ஆளாக நேர்ந்தது. கோட்சே என்பவனால் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப் பட்டார்.


முடிவுரை


நேரு தேசிய வாக்குரிமை என்ற நிலையில் மூன்று பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்று 17 ஆண்டுகள் பிரதம மந்திரியாகத் திறம்பட ஆட்சி புரிந்தார். நேரு பல திட்டங்களைத் தீட்டி நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார். இவருடைய வெளி நாட்டுக் கொள்கையின் காரணமாக இந்தியாவின் மதிப்பு உலக அரங்கில் உயர்ந்தது. ஜவஹர்லால் நேரு நோயுற்று 27-6-1964ல் காலமானார். ஆசியாவின் ஜோதி அணையாத விளக்காக சுடரிடத் தொடங்கியது


கட்டுரையை Download செய்க


ஜவஹர்லால் நேரு பற்றிய கட்டுரையை PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய > இங்கே தொடவும்

கருத்துரையிடுக

புதியது பழையவை