அண்மை

ரோஜாவின் ராஜா நேரு கட்டுரை

ரோஜாவின் ராஜா நேரு கட்டுரை

கட்டுரையை Download செய்க 



முன்னுரை


நேருஜி எப்போதும் தன் சட்டையிலுள்ள பட்டன் துவாரத்தில் ஒரு ரோஜாப்பூ வைத்திருப்பார். அவருக்கு இந்தப் பழக்கம் ஏற்பட்டது எப்படி தெரியுமா? ஒருமுறை சுதந்திரா கட்சியின் எம்.பி.யான 'நரசிங் மேத்தா' என்பவர் நேருவைச் சந்திக்க அவரது இல்லமான ஆனந்தபவனுக்குச் சென்றிருந்தார். 


அப்போது மேத்தா தன் சட்டையில் ஒரு ரோஜாப்பூவை செருகி வைத்திருந்தார். அதைக் கண்ட நேரு மிகவும் ரசித்து அவரைப் பாராட்டினார். அருகிலிருந்த பூந்தொட்டியிலிருந்து தானும் ஒரு ரோஜாப்பூவைப் பறித்து தன் சட்டையில் செருகிக் கொண்டார். அன்றிலிருந்து நேரு 'ரோஜாவின் ராஜா' ஆகிவிட்டார். அத்தகைய ரோஜாவின் ராஜா பற்றியே இக்கட்டுரை.


பிறப்பு


நேருஜி 14-11-1889ல் அலகாபாத்தில் பிரபுல வழக்கறிஞராக இருந்த மோதிலால் நேருவுக்கும், சொரூப ராணிக்கும் புதல்வராகப் பிறந்தவர்.


மோதிலால் நேரு தனது குழந்தைக்கு 'ஜவஹர்லால்' என்று பெயர் சூட்டினார். 'ஜவஹர்லால்' என்பதற்கு 'அழகிய ஆபரணம்' என்று பொருள். மோதிலால் நேருவும், அவரது மனைவி சொரூப ராணி அம்மையாரும் தனது செல்ல மகனை அன்போடும் ஆசையோடும் அரவணைத்து ஆனந்தமாக வளர்த்து வந்தனர். அவருக்கு கவலை என்பதை அறியாத வண்ணம் வளர்த்தனர்.


கல்லூரி வாழ்வு


நேரு இங்கிலாந்தில் உள்ள ஹாரோ கல்லூரியில் 1905 ஆம் ஆண்டு சேர்ந்தார்.  அக்கல்லூரியில் தான் இங்கிலாந்தின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் படித்தார்.


➤ நேரு பற்றிய கட்டுரை



கல்லூரி படிப்பில் நேரு மந்தமாகவே இருந்தார். தேர்ச்சி பெறாதிருந்த அவரை மேல் வகுப்புக்கு அனுப்புவதா? வேண்டாமா? என ஆசிரியர்கள் தயங்கினர். அதன் பின்னர் 'ஜவஹர்' பொது அறிவில் திறம் பெற்றவராகயிருந்தது கண்டு மேல் வகுப்பிற்கு அனுப்பி வைத்தனர்.


விடுதலை வேட்கை


நாள்தோறும் 'நாளிதழ்களை' படிப்பதை கடமையாகக் கொண்டிருந்தார். அந்த நாளிதழ்களின் மூலம் ஆகாயத்தில் பறக்கச் சோதனைகள் நடப்பதைப் பற்றியும், ரஷ்யா ஜப்பான் யுத்த நடவடிக்கைகளைப் பற்றியும், இங்கிலாந்து தேர்தல் பற்றிய விபரத்தையும், அறிவியல் சம்பந்தமான செய்திகளைப் பற்றியும் நன்கு தெரிந்து வந்தார். அதன் மூலம் ஆசிரியர்கள் கேட்கும் பொது அறிவு சம்பந்தமான கேள்விகளுக்குப் பதில் அளித்து வந்தார். அதற்காக அவரைப் பாராட்டிப் புத்தகங்கள் பரிசாகக் கிடைத்தன. அந்த புத்தங்களில் ஒன்று 'கரிபால்டியின்' வாழ்க்கை வரலாறு. அந்த புத்தகத்தைப் படித்த ஜவஹருக்கு ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் பாரத நாட்டை மீட்க வேண்டுமென்ற எண்ணம் அன்றே அவருள் எழுந்தது.


நேருவின் முதல் உரை


1915 ஆம் ஆண்டு அலகாபாத்தில் 'சாப்ரூ' என்பவரின் தலைமையில் பத்திரிக்கை அடக்குமுறை எதிர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்ட நேரு ஆங்கிலத்தில் சுருக்கமாகப் பேசினார். அதில் கருத்து நிறைந்திருந்தது. நேரு பேசிய முதல் மேடைப் பேச்சாக அது அமைந்தது. மக்கள் ஆரவாரம் செய்து அவர் உரையை ஆதரித்தனர். அதைக்கண்ட 'சாப்ரூ' நேருவைக் கட்டிச் சேர்த்து பிடித்து உணர்ச்சி தழும்ப தழுவிக் கொண்டார்.


அரசியல் ஈடுபாடு


பொது வாழ்க்கையில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த நேரு, தன் வக்கீல் தொழிலை கைவிட்டுவிட்டு தீவிரமாக அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். அந்தச்சமயம் இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆதிக்கம் வலுத்திருந்தது. 1918 ஆம் ஆண்டு 'மாண்டேடு ஜேம்ஸ் போர்டு' அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையின் கருத்துத் தாக்கத்தினால் கலவரம் ஏற்பட ஆரம்பித்தது. காங்கிரசாரிடையே பிளவு ஏற்பட ஆரம்பித்தது. மிதவாதிகள் காங்கிரசிலிருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்தனர். மிதவாதிகளின் போக்கு நேருவை கோபமடையச் செய்தது.


➤ நேருவும் குழந்தைகளும் கட்டுரை


மிதவாதிகளின் 'திலீடர்' என்ற பத்திரிகைக்கு போட்டியாக 1919 ஆம் ஆண்டு 'தி இன்டி பெண்டன்ட்' என்ற பத்திரிக்கையை நேரு துவக்கினார். அதே ஆண்டு மார்ச் 18 ஆம் நாளில் 'ரௌலட் சட்டம்' அமுலுக்கு வந்தது. இந்த சட்டத்தினால் இந்தியர்கள் மிகவும் வதைபட்டனர். இதனை எதிர்த்து காந்திஜி நாடு முழுவதும் 'பந்த்' நடத்த திட்டமிட்டார். நேருவும், மற்ற தலைவர்களும் இதனை வரவேற்றனர். மார்ச் 30 ஆம் நாள் 'வெள்ளையனே வெளியேறு' என்ற முழக்கத்துடன் 'பந்த்' தொடங்கி ஒரு வாரம் நீடித்தது.


இடைக்கால அரசு


1946 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் நாளன்று இடைக்கால அரசினை பிரிட்டிஷ் அரசு நிறுவி, இடைக்கால அரசின் துணைப் பிரதமாரக நேருவும், தலைவராக அட்லி பிரபுவும் செப்டம்பர் 2 ஆம் நாளன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.


இந்தியா சுதந்திரம்


1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாளன்று புது டில்லியே விழாக்கோலம் பூண்டிருந்தது. சுதந்திர விழாவில் கலந்து கொள்வதற்காக மக்கள் வெள்ளம் செங்கோட்டையை நோக்கி வந்தது. தேச விடுதலைக்காக போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கு மெளன அஞ்சலி செலுத்தினார்கள். வெண்ணிற உடைகளில் நேரு நள்ளிரவு நேரத்தில் உரை நிகழ்த்தினார். அதன்பின்பு இந்திய தேசிய மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.


அந்த நிமிடத்திலிருந்து இந்தியா சுதந்திர நாடானது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவி ஏற்றார். மௌண்ட்பேட்டன் பிரபு கவர்னர் ஜெனரலாக பதவியேற்றார்.


நேருவைப் போற்றிய உலகத் தலைவர்கள்


நேரு பளிங்கு போல் பரிசுத்தமானவர்! ஐயத்திற்கு இடமின்றி அவர் சத்தியவான்; வீரர்களுக்கோர் இலக்கணமானவர்! அவருடைய பொறுப்பில் இந்தத் தேசம் பாதுகாப்பாக இருக்கும்! - காந்தி


நேருஜி பெரிய சிந்தனையாளர். புதிய சிந்தனையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர் மக்களிடம் பரப்பினார். அவருடைய துடிப்பும் எண்ணமும், இலட்சிய நோக்கும் நாம் இன்றும் நினைத்தால் உணர்ச்சிதரக் கூடியவை - காமராசர்


➤ விடுதலைப் போரில் நேரு


பாரதத்தின் அரியாசனம் ஜவகர்லாலுக்கே உரியது என்பதில் சந்தேகமில்லை. அவருடைய வாழ்வு ராஜகம்பீரமானது. அவரது உறுதி அசையாதது. அவரது தீரம் பின்வாங்காதது - மகாகவி தாகூர்


முடிவுரை


நேரு தேசிய வாக்குரிமை என்ற நிலையில் மூன்று பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்று 17 ஆண்டுகள் பிரதம மந்திரியாகத் திறம்பட ஆட்சி புரிந்தார். நேரு பல திட்டங்களைத் தீட்டி நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார். இவருடைய வெளி நாட்டுக் கொள்கையின் காரணமாக இந்தியாவின் மதிப்பு உலக அரங்கில் உயர்ந்தது. இவர் திடீரென்று நோயுற்று 27-6-1964ல் காலமானார். ஆசியாவின் ஜோதி அணையாத விளக்காக சுடரிடத் தொடங்கியது. ரோஜாவின் ராஜா பல குழந்தைகளுக்கு கனவு நாயகனாகி மறைந்தார். 

கருத்துரையிடுக

புதியது பழையவை