அண்மை

திரைப்படத்தின் நன்மை தீமைகள் கட்டுரை

 

திரைப்படத்தின் நன்மை தீமைகள் கட்டுரை

முன்னுரை - திரைப்படத்தின் நன்மை தீமைகள் கட்டுரை


'காற்றிலேறியிவ் விண்ணையும் சாடுவோம்' என்ற பாரதியின் வாக்கு இன்று பலித்து விட்டது. மனிதன் மண்ணில் மட்டுமின்றி விண்ணிலும் கால் பதித்துவிட்டான். அவனது அறிவியல் திறனால் சந்திரனுக்கு மட்டுமல்லாது இன்று செவ்வாய்க்கும் சென்று விட்டான். என்றாலும் அறிவியலால் விளைந்துள்ள அற்புதங்களுள் மக்களைப் பெரிதும் கவர்ந்துள்ள ஒன்று திரைப்படக்காட்சியே. திரைப்படத்தின் நன்மை தீமைகள் கட்டுரை பற்றி கூறுவதே இப்பதிவின் நோக்கம்.


தோற்றம் - திரைப்படத்தின் நன்மை தீமைகள் கட்டுரை


திரைப்படக் காட்சியைக் கண்டுபிடித்து உலகுக்கு அளித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்னும் அறிவியல் மேதையாவார். அவருக்கு முன்னரே 'கிர்ச்சர்' என்பவர் இயங்காப் படக் காட்சியைக் கண்டு பிடித்திருந்தார். அதற்குப் பின்னர்தான் எடிசன், இயங்கும் படக் காட்சியைக் கண்டு பிடித்தார். முதலில் காட்டப்பட்டது பேசாப் படமாகும். அதனை 'ஊமைப்படம்' என்பார்கள். பிறகு ஒலி வெளியிடும் கருவியையும் இணைத்துப் பேசும் படக்காட்சியையும் உண்டாக்கிளார்கள். இதன் நன்மைத் தீமைகள் பற்றி விரிவாகக் காண்போம்.


➤ கேடில் விழுச்செல்வம் கல்வி கட்டுரை


நன்மைகள் - திரைப்படத்தின் நன்மை தீமைகள் கட்டுரை


திரைப்படத்தால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக விளங்குகிறது. திரைப்படத் தொழிலால் பலருக்கு வேலை கிடைக்கிறது. நல்ல கதைகளையும் கருத்துகளையும் கொண்டு அமையும் திரைப்படங்கள் மக்களுக்கு நல்ல படிப்பினையைத் தருகின்றன. நாம் நேரில் சென்று காணமுடியாத எழில் மிகுந்த இடங்களைத் திரைப்படத்தில் கண்டு களிக்கலாம். உலகப் புகழ்பெற்ற சிறந்த கட்டிங்களையும் அரிய காட்சிகளையும் படமாக்கித் தருகிறது திரைப்படம். 


இன்றைய திரைப்படம் இயற்கை எழில் கொஞ்சும் மலைகளையும், நதிகளையும், அருவிகளையும், வண்ண வண்ண மலர்களையும் கண்ணுக்கு விருந்தாக்கி அளிக்கின்றது. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் ஒரு சேர வளர்க்கிறது. மறைந்த நடிகர், நடிகையரையும் எஞ்ஞான்றும் திரைப்படத்தில் கண்டு களிக்கலாம். கல்விப்படக் காட்சிகள் மாணாக்கர்க்குப் பாடங்களை எளிதில் கற்பிக்க உதவுகின்றன. முக்கியமாக அறிவியல், வரலாறு, புவியியல் பாடங்களைக் கற்பிப்பதற்குக் கல்விப்படக் காட்சிகள் பெரிதும் உதவியாய் உள்ளன. அரசு செய்தித்துறையினரால் வெளியிடப்படும் செய்தித்துறைப் படங்கள் அரசின் செயல்பாட்டை மக்களுக்கு விளக்குகின்றன; மக்கள் அறிந்து கொள்ள உதவுகின்றன. செவிப்புலனைக் காட்டிலும் கற்கும்போது கட்புலன் வாயிலாகக் மாணாக்கர் மனத்தில் அவை நன்கு பதியும். எனிதில் புரிந்து கொள்வர்.


➤ சிக்கனமும் சிறுசேமிப்பும் கட்டுரை


தீமைகள் - திரைப்படத்தின் நன்மை தீமைகள் கட்டுரை


திரைப்படத்தால் தீமைகளும் விளையாமலில்லை. திரைப்படம் பார்ப்பதில் பெருவிருப்பங்கொண்டு காசையும் காலத்தையும் விரயமாக்குகின்றனர் பலர். நூற்றுக் கணக்கானோர் ஒரிடத்தில் சுமார் மூன்று மணிநேரம் அமர்ந்து - அடைபட்டு இருப்பதால் புழுக்கம் ஏற்படுகிறது. அதனால் உடல் நலம் கெட வாய்ப்பு எற்படுகிறது. நடிப்புத் தொழில் மூலம் பேரும் புகழும் பெரும் புகழும், பெருஞ்செல்வமும் பெறலாம் என்ற பகற்கனவுடன் பட்டணம் சென்று பாழாகும் நபர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா. வெளிவரும் திரைப்படங்கள் எல்லாம் நல்லவையாய் அமைவதில்லை. திரைப்படங்களிலிருந்து தேவையற்றவற்றை அரைகுறையாய்ப் புரிந்து கொண்டு அழிவைத் தேடிக்கொள்ளும் கூட்டம் ஒருபுறம். கண்டதையும் காட்டிக் காசாக்க நினைக்கும் வணிக நோக்கு மறுபுறம் தற்காலப்படங்களில் வன்முறை மிகுதியாகக் காட்டப்படுவதால் மக்கள், குறிப்பாகக் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். சண்டைக் காட்சிகளைக் கண்டு, அவை உண்மையென்று நம்பி விளைவு அறியாமல் அவர்களும் அவ்வாறு சண்டையிட முயல்கிறார்கள். மேல் நாடுகளில் திரைப்படங்களில் கொலை, கொள்ளைக் காட்சிகளைக் காணும் குழந்தைகள் துப்பாக்கியால் ஒருவருக்கொருவர் சுட்டுக்கொள்ளும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. 


சில ஆண்டுகட்கு முன் ஓர் இளைஞன் தன் பெற்றோரையே கொலை செய்துவிட்ட செய்தி நாமனைவரும் அறித்ததே. அவன் அங்குக்கையாண்ட முறையும், அவனை அவ்வாறு செய்ய ஊக்குவித்ததும் ஒரு திரைப்படமே, டிக்கெட் வாங்க பணம் கேட்டதற்கு அவனது தந்தை மறுத்துள்ளார் அதற்காக அவன் அவனது தந்தையையே கொலை செய்திருக்கிறான். 


➤ மாணவர்களின் கடமைகள்


பொதுவாக நல்லதைக் காட்டிலும் கெட்டதுதான் எளிதில் புலப்படும், மனத்தில் பதியும். எனவே நல்லது கெட்டது இரண்டும் கலந்துள்ள திரைப்படத்தில் மக்கள் நல்லதை எடுத்துக் கொள்ளாது கெட்டதைத்தான் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள முயல்கிறார்கள். இளைஞர்களும், இளம் பெண்களும் திரைப்பட நாயகிகளையும், நாயகர்களையும் வழிபாடு செய்ய ஆரம்பித்து விடுகின்றார்கள். திரையரங்குக்குச் சென்று படம் பார்க்கும் காலம் போய் இன்று தொலைக்காட்சிப் பெட்டி அதை வீட்டிற்கே கொண்டு வந்து விட்டதால் வீட்டிலுள்ள பெண்கள் திரைப்பட மோகத்தால் வீட்டை முழுமையாகக் கவனிக்காமல் படம் பார்ப்பதிலே மூழ்கி விடுகிறார்கள். தயாரிப்பாளர்கள் வசூலையே குறியாகக் கொள்வதால் தரமான நல்ல கலைப்படங்களை எடுக்க முன் வருவதில்லை. காட்சிகளும் பாடல்களுமே கூட தற்போது வரும் படங்களில் தமிழை வளர்ப்பதாய் இல்லை. புதிய பாடல்கள் தமிழுக்கு பெரிய இழப்பையே தருகின்றது. 


தங்கள் அபிமான நடிக நடிகையர் நடிக்கும் படங்களை முதல் நாளே முதல் காட்சியையே காணவேண்டும் என்று பலர் நினைப்பதால் திரையரங்குகளில் சீட்டு வாங்குமிடத்தில் நெரிசலில் இறப்புவரை நிகழ்கிறது. நூறு ரூபாய் கட்டணம் உள்ள சீட்டை ஐநூறுரூபாய், ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து வாங்குகின்றனர். 


முடிவுரை - திரைப்படத்தின் நன்மை தீமைகள் கட்டுரை


திரைப்படத் தயாரிப்பாளர்கள் பலதரப்பட்ட மக்களின் விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட வேண்டியுள்ளது. ஆந்திர தயாரிப்பாளர்கள் இப்போது வடநாட்டவர்களுக்காகவும் படம் எடுக்க வேண்டியதாகி விட்டது. 


➤ முயற்சி திருவினையாக்கும் கட்டுரை


அவர்கள் அனைவரையும் மகிழ்விக்கவும், திருப்தி செய்யவும் வேண்டியுள்ளதால் திரைப்படத்தில் தேவையற்ற பாடல் காட்சிகள், குழு நடனங்கள், சண்டைக் காட்சிகள் போன்றவற்றை இணைக்கின்றார்கள். அதனால் திரைப்படத்தில் நன்மை தீமை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல் இணைந்தே உள்ளன. 'வெல்லத்திலும் கல்லுண்டு' என்பார்கள். கல் இருக்கிறது என்பதற்காக வெல்லத்தைப் பயன்படுத்தாமலிருக்கிறோமா? அது போலவே தீமைகள் விளைகின்றன என்று திரைப்படத்தை யாரும் ஒதுக்குவதில்லை. ‘குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்' என்னும் வள்ளுவரின் வாய்மொழிப்படி குணம் குற்றம் இவற்றை ஆராய்ந்து அவற்றுள் குணத்தை மட்டும் மனத்திற் கொள்ள வேண்டும். அன்னப்பறவையானது பாலையும் நீரையும் கலந்து வைத்தால், நீரிலிருந்து பாலைமட்டும் பிரித்து அருந்துதைப் போல நாமும் திரைப்படங்களிலிருந்து நமக்குத் தேவையான நல்லனவற்றை மட்டுமே எடுத்துக் கொண்டு பயன் பெறுவோமாக.

கருத்துரையிடுக

புதியது பழையவை