அண்மை

EB எண்ணோடு ஆதார் இணைப்பது மிகவும் சுலபம்

EB எண்ணோடு ஆதார் இணைப்பது மிகவும் சுலபம்


சமீபத்தில் தமிழக அரசு EB எண்ணுடன் ஆதாரை இணைக்கக் கூறி உள்ளது. இந்த பதிவில் இணையத்தில் உங்களது 'EB எண்ணோடு ஆதாரை எவ்வாறு எளிதில் இணைப்பது' என்பதைப் பற்றி காண்போம்.


படி 1


Google இணையதளத்தில் TNEB Online என்று Search செய்து கொள்ளுங்கள்


அதில் முதலில் காட்சிப்படுத்தப்படும் TANGEDCO Online Payment எனும் பக்கத்தை திறந்து கொள்ளவும். 


Google இணைய தளத்தின் வாயிலாக search செய்து உள் நுழையும் போது Website Timeout ஆகாமல் இருக்கும். 


படி 2


Click here to link Aadhaar

வலைதளத்தின் மேற்புறத்தில் TANGEDCO என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் கீழே Click here to link Aadhaar என்று குறிப்பிடப்பட்ட இணைப்பைத் சொடுக்கித் திறக்கவும்.


படி 3


Service details

திறக்கப்படும் பக்கமே EB எண்ணோடு ஆதாரினை இணைப்பதற்கான பக்கமாகும்.


அந்த பக்கத்தில் கேட்க்கப்பட்டிருக்கும் Service Connection Number  - உங்களது மின் இணைப்பு எண், Mobile number - உங்களது தொலை பேசி எண், Enter text shown in image - உயிருணரி (அதாவது Captcha) இது போன்ற விவரங்களை சரியாக உள்ளிட்ட பிறகு Enter கொடுக்கவும்.


கவனிக்க: இந்த பக்கத்தில் நீங்கள் குறிப்பிடும் மொபைல் எண்ணுக்கே இனி உங்களது மின் இணைப்பிற்கான கட்டண விவரங்கள் SMS செய்யப்படும். இதற்கு முன் நீங்கள் கொடுத்திருக்கும் எண்ணை மாற்ற விரும்பினால் இந்த பக்கத்தில் அந்த புதிய மொபைல் எண்ணினை உள்ளிட்டாலே போதும்


படி 4


Occupant details

Enter செய்த பிறகு திறக்கப்படும் பக்கம் ஆதாரை இணைப்பதற்கான அடுத்த படிநிலையாகும். இதில்  இதற்கு முன்னைய பக்கத்தில் நீங்கள் உள்ளிட்ட மின் இணைப்பு எண் காட்சிப் படுத்தப்பட்டிருக்கும்.


உங்களது மின் நுகர்வோர் பெயரின் இறுதி எழுத்துகள் காட்டப்பட்டிருக்கும். அதை வைத்து உங்களது மின் இணைப்பினை நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம்.


அடுத்து, Occupant details என்ற பகுதி தரப்பட்டிருக்கும். அதில் Owner, Tenant, Owner but service Connection name not transferred மற்றும் NRI - Relative என்ற பகுதிகள் தரப்பட்டிருக்கும். இதைப் பற்றி விரிவாகக் காண்போம்.


Owner: நீங்கள் உள்ளிட போகும் ஆதார் எண்ணின் பெயரும் உங்களது மின் இணைப்பு பெயரும் ஒன்றாக இருந்தால் நீங்கள் 'Owner' என்பதை தேர்வு செய்யவும்.


Tenant: நீங்கள் வாடகை வீட்டில் வசித்தால், அந்த வீட்டின் மின் இணைப்பை உங்கள் பெயரில் இணைத்து கொள்ள உங்களது வீட்டின் உரிமையாளர் சம்மதித்தால் நீங்கள் 'Tenant' என்பதை தேர்வு செய்யவும்


Owner but service Connection name not transferred: நீங்கள் சொந்த வீட்டில் இருந்து உங்களது மின் இணைப்பு உள்ள பெயருக்கு உங்களிடம் ஆதார் இல்லை எனில் இதை தேர்வு செய்து கொள்ளவும். இதைப் பற்றி கீழே விரிவாக தரப்பட்டுள்ளது.


யாருக்கு பொருந்தும்

  1. நீங்கள் அந்த மின் இணைப்பிற்கு உரிமையாளராய் இருந்தும், அந்த மின் இணைப்பின் பெயர் உங்களது பெயருக்கோ, சரியான உரிமையாளரின் பெயருக்கோ மாற்றப்படாமல் இருந்தால் இந்த Owner but service Connection name not transferred என்ற Option உங்களுக்கு பொருந்தும்.
  2. நீங்கள் புதிதாக வீட்டினை வாங்கி உள்ளீர்கள். அந்த வீட்டின் மின் இணைப்பு பெயர் மாற்றபடவில்லை என்றால் இந்த Optionஐ தேர்வு செய்து உங்களது ஆதாரை இணைத்துக் கொள்ளலாம்
  3. மின் இணைப்பை பெற்றிருந்தவர் உங்களுடன் இல்லை என்றாலும், இறந்திருந்தாலும் இந்த தெரிவினை (Optionஐ) தேர்வு செய்து கொள்ளலாம்.

NRI-Relative: வெளிநாடு வாழ் இந்தியரின் சொத்துகளுக்கு அவர்களின் உறவினர் தங்களது ஆதார் கொண்டு இணைத்துக் கொள்ளலாம். உங்களது உறவினர் வெளிநாடு வாழ் இந்தியராக (NRI) இருந்தால் நீங்கள் இந்த Optionஐ தேர்வு செய்யவும்


படி 5


I hereby give my consent to link my aadhaar to above service connection


மேற்கண்ட அனைத்து படிகளையும் சரியாக கடந்த பின்னர் உங்களது ஆதார் எண்ணை உள்ளிடவும்.


கீழே உள்ள I hereby give my consent to link my aadhaar to above service connection number என்ற நிபத்தனைக்கு tick செய்து Send OTP பொத்தானை சொடுக்கவும்.


படி 6


Aadhaar OTP Authentication

Aadhaar OTP Authentication என்னும் கட்டம் திறக்கப்படும். அதில் உங்களது மின் இணைப்பு எண், மின் இணைப்பின் பெயர், ஆதார் எண் போன்ற விவரங்கள் காட்டப்படும்.


நீங்கள் உள்ளிட்ட ஆதார் எண்ணோடு இணைந்திருக்கும் மொபைல் எண்ணுக்கு தான் OTP வரும்,  படி 3ல் உள்ளிட்ட மொபைல் எண்ணுக்கு OTP வராது.


மொபைல் எண்ணோடு உங்களது ஆதார் இணைந்திருக்கவில்லை என்றால் மின் இணைப்பை நீங்கள் உள்ளிடும் ஆதார் எண்ணோடு இணைக்க முடியாது.


எந்த எண்ணிற்கு OTP வரவேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அந்த எண்ணை ஆதாரோடு இணைக்க உங்களது ஊரின் அஞ்சலகம், வங்கி அல்லது இ-சேவை மையத்தை அணுகவும்.


படி 7


Aadhaar details successfully linked with your EB Number

நீங்கள் உள்ளிட்ட ஆதார் எண்ணோடு இணைந்திருக்கும் மொபைல் எண்ணுக்கு 6 இலக்க OTP வரும். அதை இந்த பக்கத்தில் உள்ளிட்டால் உங்களது EB எண்ணோடு ஆதார் இணைந்துவிடும்


பிறகு ஆதார் இணைந்ததற்கான Acknowledgement பக்கம் திறக்கும். அதில் மின் இணைப்பு எண், பெயர், Name as in Aadhaar, Address as in Aadhaar போன்ற விவரங்கள் காட்டப்பட்டிருக்கும். அவை உங்களது மின் இணைப்போடு ஆதார் எண் இணைந்ததை உறுதி செய்கிறது.


➤ உங்களது ஆதாரை இணைக்க இங்கே தொடவும்

1 கருத்துகள்

  1. இந்த எளிய நடைமுறையை தயார் செய்து விட்டு பிறகு அறிவிப்பை விட்டிருக்கலாம்..



    பரவாயில்லை இப்பவும் அவகாசம் இருக்குது...

    பதிலளிநீக்கு
புதியது பழையவை