அண்மை

பிப்ரவரி மாத முக்கிய தினங்கள் 2023

 பிப்ரவரி மாத முக்கிய தினங்கள் 2023

பிப்ரவரி மாத முக்கிய தினங்கள் 2023

அனைத்து மாதங்களும் முக்கிய தினங்களை கொண்டு இருக்கிறது. உலகியல் பார்வையில் ஒவ்வொரு நாளுமே முக்கிய தினங்கள் ஆகும். அந்த முக்கிய தினங்கள் தேசிய முக்கிய தினங்களாகவும் உலக முக்கிய தினங்களாகவும் வகைப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் முக்கிய தினங்களையும் தெரிந்து கொள்வதன் மூலம் அந்நாளுக்கான முன்னேற்பாடுடன் இருக்கலாம். நடத்தப்படும் போட்டிகளை அறிந்த அவைகளில் பங்கேற்கலாம். TNPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன்படும். முக்கிய தினங்களை PDF வடிவில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழே பொத்தான் தரப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி இப்பதிவின் கோப்பை தரவிறக்கி கொள்ளவும். ஒரே நாளின் இரண்டு அல்லது மூன்று முக்கிய தினங்களும் இருக்கும். அவை (ம) மற்றும் என்ற குறியோடு காணப்படும்.


பிப்ரவரி மாத முக்கிய தினங்கள் 2023

நாள் தினம்
பிப்ரவரி 01 இந்திய கடலோர காவல்படை தினம்
பிப்ரவரி 02 உலக சதுப்பு நில தினம்
பிப்ரவரி 04 உலக புற்றுநோய் தினம்
பிப்ரவரி 04 சர்வதேச மனித சகோதரத்துவ தினம்
பிப்ரவரி 06 சர்வதேச பெண் பிறப்புறுப்பு சிதைப்பு எதிர்ப்பு தினம்
பிப்ரவரி 10 உலக பருப்பு தினம்
பிப்ரவரி 10 தேசிய குடற்புழு நீக்க தினம்
பிப்ரவரி 11 உலக யுனானி தினம்
பிப்ரவரி 11 உலக நோயாளர் தினம்
பிப்ரவரி 12 டார்வின் தினம்
பிப்ரவரி 12 தேசிய உற்பத்தித்திறன் தினம்
பிப்ரவரி 13 உலக ரேடியோ தினம்
பிப்ரவரி 13 தேசிய மகளிர் தினம்
பிப்ரவரி 13 (ம) சரோஜினி நாயுடு பிறந்த தினம்
பிப்ரவரி 14 காதலர் தினம்
பிப்ரவரி 15 சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினம்
பிப்ரவரி 18 புளூட்டோ தினம்
பிப்ரவரி 20 உலக சமூகநீதி தினம்
பிப்ரவரி 21 உலக தாய்மொழி தினம்
பிப்ரவரி 23 உலக ரோட்டரி தினம்
பிப்ரவரி 24 மத்திய சுங்கவரி தினம்
பிப்ரவரி 27 தேசிய புரத தினம்
பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினம்
  ➤ மார்ச் மாத முக்கிய தினங்கள் 2023

கருத்துரையிடுக

புதியது பழையவை