மார்ச் மாத முக்கிய தினங்கள் 2023
அனைத்து மாதங்களும் முக்கிய தினங்களை கொண்டு இருக்கிறது. உலகியல் பார்வையில் ஒவ்வொரு நாளுமே முக்கிய தினங்கள் ஆகும். அந்த முக்கிய தினங்கள் தேசிய முக்கிய தினங்களாகவும் உலக முக்கிய தினங்களாகவும் வகைப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் முக்கிய தினங்களையும் தெரிந்து கொள்வதன் மூலம் அந்நாளுக்கான முன்னேற்பாடுடன் இருக்கலாம். நடத்தப்படும் போட்டிகளை அறிந்த அவைகளில் பங்கேற்கலாம். TNPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன்படும். முக்கிய தினங்களை PDF வடிவில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழே பொத்தான் தரப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி இப்பதிவின் கோப்பை தரவிறக்கி கொள்ளவும். ஒரே நாளின் இரண்டு அல்லது மூன்று முக்கிய தினங்களும் இருக்கும். அவை (ம) மற்றும் என்ற குறியோடு காணப்படும்.
மார்ச் மாத முக்கிய தினங்கள் 2023
நாள் | தினம் |
---|---|
மார்ச் 01 | தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய (NCPCR) தினம் |
மார்ச் 03 | உலக வன உயிரிகள் தினம் |
மார்ச் 04 | உலக உடல் பருமன் தினம் |
மார்ச் 05 | தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய நிறுவன தினம் |
மார்ச் 06 | மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை தினம் |
மார்ச் 08 | உலக மகளிர் தினம் |
மார்ச் 10 | சர்வதேச பெண் நீதிபதிகள் தினம் |
மார்ச் 11 | தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் நிறுவன தினம் |
மார்ச் 12 | தேசிய ஒரு செடி நடும் தினம் |
மார்ச் 14 | சர்வதேச கணித தினம் |
மார்ச் 15 | உலக நுகர்வோர் தினம் |
மார்ச் 16 | தேசிய நோய்த்தடுப்பு நாள் |
மார்ச் 18 | உலக தூக்க தினம் |
மார்ச் 18 | உலக மறுசுழற்சி தினம் |
மார்ச் 20 | உலக சிட்டுக்குருவி தினம் |
மார்ச் 21 | உலக காடுகள் தினம் |
மார்ச் 22 | உலக நீர் தினம் |
மார்ச் 23 | உலக காலநிலை தினம் |
மார்ச் 23 | (ம) உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் |
மார்ச் 24 | உலக காசநோய் தினம் |
மார்ச் 27 | உலக நாடக தினம் |
மார்ச் 28 | உலக கால்நடை மருத்துவ தினம் |