இந்தியாவில் ஊன் உண்போர் தங்களை ‘அசைவம்’ அதாவது சைவம் அல்லாதோர் என்று கூறிவருவதன் வழி மீண்டும் சைவத்தின் புனித மேலாதிக்கத்தை மறைமுகமாக ஏற்று வருகிறார்கள். ஒன்று மற்றொன்றை வேறுபடுத்துவதன் மூலம் தன்னை விளக்கிக் கொள்கிறது என்பார் ழாக் லக்கான். இங்கிருந்துதான் உயர்வு×தாழ்வு என்ற இருமைகளும் உருவாகின்றன. அசைவம் தன்னை சைவம் அல்லாதது என்று விளக்குவதன் மூலம் சைவத்தை மையமாக ஏற்று, அதனின் உயர்வையும் தனதின் தாழ்வையும் (விளிம்பையும்) ஒப்புக்கொள்கிறது. மொழியின் இத்தன்மை (புனிதம்×அபுனிதம்) சமூக உடல்களிலும் எதிரொலிக்கின்றது. காலங்காலமாக மொழியின் கெட்டியாக்கம் மற்றும் கடத்தல் வழி நிகழ்ந்துவந்த புனித கட்டுருவாக்கத்தில் இதுஒரு கூறு. மேற்கத்திய நாடுகளில் Non Veg என்ற பதம் இல்லையாம். Meatarian (இறைச்சி உண்போர்) Non Meatarian (இறைச்சி உண்ணாதோர்) என்ற பதங்கள் தான் உள்ளனவாம். காரணம் அங்கு மையத்தில் இருப்பது ஊன் உணவே. இதனால் அங்கு, ஊன் உணவு உண்ணாதோர் தங்களை வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள Non Meatarian (அதிகாரத்தில் இல்லாதவர்கள்) என்று விளக்க வேண்டி உள்ளது. அதிகாரம் எப்போதும் தன்னை அதிகாரமற்றோர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டிக்கொள்ளும் பய உணர்வோடு (Ethnic Fear போல) இயங்குகிறது. இந்த உணர்வே மொழியில் அதிகாரத்தை மையமிட்ட விளக்கங்களை உருவாக்குகிறது. அது நான் × நானல்லாதது என்பதிலிருந்து தான் தொடங்கும். இவ்வகையில் புனித உணவான சைவம் தன்பார்வையில் இருந்து நானல்லாததாக அசைவத்தை விளக்குகிறது. அதைப் (அசைவம் - சொல்) பயன்படுத்துவதன் மூலமே நாமும் சைவத்திற்குக் கீழானவர்களாக மாறுகிறோம். சைவர்கள் புனிதமாகிறார்கள்/ மேலானவர்களாகிறார்கள். இதற்கான தீர்வை அதிகார இடமாற்றமோ (ஊன், ஊனில்), சொல்லுடைப்போ தராது என்பது என்கருத்து. நம்நிலத்தில் அவ்வளவு இறுக்கமான தத்துவத்தளத்தை இவ்விரண்டு சொற்களும் ஏற்கனவே பெற்றுவிட்டன.
தீசன்
Non Meatarian - உணவதிகாரம் என்பது இங்கு உள்ளதென்பது உண்மையே. ஆனால் சைவம் இந்தியாவில் அதிகாரம் செய்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. சைவம் / அசைவம் சாப்பிடுவதிலிருந்து நீ யார் என்பதை விட இவர் ஏன் இவ்வுணவை சாப்பிடுகிறார் என்பதே முக்கிய கேள்வியாக அமைகிறது.
பதிலளிநீக்குஒன்று மற்றொன்றை வேறுபடுத்துவதன் மூலம் தன்னை விளக்கிக் கொள்கிறது என்பார் ழாக் லக்கான். இங்கிருந்துதான் உயர்வு×தாழ்வு என்ற இருமைகளும் உருவாகின்றன. சைவம் சாப்பிடுபவரே இதை ஊர்ஜிதப்படுத்துவார்.. அசைவம் சாப்பிடுவோர் தன்னைத்தாழ்த்திக் கொள்வதாக பார்க்க இயலாது.
நானே உயர்ந்தவர் என்பதற்கும், நீயே உயர்ந்தவருக்கும் வேறுபாடு உண்டு அல்லவோ.
பொது நீரோட்ட உளவியலில்,
நீக்குசைவம் = புனிதம், அசைவம் = அபுனிதம்
என்று நிலைத்துவிட்டதற்கான காரணத்தைக் கூறுகிறேன் தோழர். அதை நாம் மறுக்கமுடியாது.
சொல்லின்மீது ஏற்றிவைக்கப்பட்ட கருத்தின் மதிப்பு அதிகார மைய நோக்கிலிருந்து தீர்மானிக்கப்படுகிறது.
காரணம் தீர்க்கமானதா என பார்க்க. பொது நீரோட்ட உளவியல் என முக்கிய கருத்தாடல்களை முடிவு கட்ட முடியாதல்லவா.
பதிலளிநீக்குபார்ப்பனர் வருவதற்கு முன் புலால் மறுத்தல் என்பது என்ன மாதிரியான முறைமையில் இருந்தது என்பதனைக்கருத்தில் கொண்டு பேசுவது நலம் தோழர்.